‘இன்னும் சில தினங்களில்’ – சியான் விக்ரம் கொடுத்த ஹின்ட்! என்னாவா இருக்கும்?

Chiyan vikram
Chiyan vikram
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விக்ரம் நடித்த ஜெமினி படம் வெளியாகி இன்றுடன் 22 வருடங்கள் ஆன நிலையில், விக்ரம் ‘இன்னும் சில தினங்களில்’ என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு ஒரு சூப்பர் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது என்பதை அறிவித்திருக்கிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படம் விரைவில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதையும், கதாப்பாத்திரங்களையும் கொண்டு உருவாகும் இப்படத்தின் போஸ்டர்கள், டீஸர்களே ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. மேலும் இப்படம் விக்ரம் கெரியரிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படுகிற ஒரு படமாகவும் உள்ளது.

இந்தப் படத்தை அடுத்து, இந்தாண்டு ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சூர்யப்புத்ர மஹாவீர் கர்ணன்' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இவர் நடிப்பில் திரு இயக்கத்தில் 'கருடா' படம், அருண் குமார் இயக்கத்தில் சியான் 62 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்தாண்டு அடுத்தடுத்தப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் விக்ரம், இன்று ஒரு சூப்பர் ஹின்ட்டை வெளியிட்டிருக்கிறார்.

விக்ரம், கிரன் ராத்தோட், கலாபவன் மணி ஆகியோர் நடிப்பில் 2002ம் ஆண்டு ஜெமினி படம் வெளியானது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தப்படமான இப்படம் வெளியாகி இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது. இதனையடுத்து அதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் இணையத்தில் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்தும், போஸ்ட்களைப் பகிர்ந்தும் வருகின்றனர். இதனால் #ChiyaanVikram என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்தநிலையில்தான் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ மிக்க நன்றி.. for all the love pouring in today. Interesting updates..இன்னும் சில தினங்களில், Any guesses?? & don’t forget to ஓ போடு!! ‘ என்று பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியானது அக்ஷய் குமாரின் ‘Bade Miyan Chote Miyan’ திரைப்படம்!
Chiyan vikram

ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைந்த இன்றைய  தினத்தில், இவர் போட்ட இந்தப் பதிவினால், ரசிகர்கள் ஜெமினி படத்தின் பாகம் 2 ஆக இருக்குமோ? என்று சந்தேகிக்கின்றனர். இல்லையெனில் கர்ணன், கருடா போன்ற படங்களின் முக்கிய அறிவிப்பாக இருக்குமோ? என்றும் கருதுகின்றனர். இதனையடுத்து இந்த ஹின்ட் ரசிகர்களை குழப்பம் கலந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com