3 Idiots Part 2 வருகிறதா? கரீனா கபூர் காட்டம்!

பாலிவுட் பூமராங்
3 Idiots Part 2 வருகிறதா?  கரீனா கபூர் காட்டம்!
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 2009இல் திரைக்கு வந்த ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தில் அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்திருந்தது. இதே படம் தமிழில் ‘நண்பன்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படத்தின் 2 ஆம் பாகம் இந்தியில் உருவாக்கப் படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி இதற்காக ரகசியத் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதில் தன்னைச் சேர்க்கவில்லை என்றும் கரீனா கபூர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். என்னிடமிருந்து இதை மறைக்கிறார்கள். 2ஆம் பாகம் த்ரீ இடியட்ஸ்  நான் இல்லாமல் நடக்காது. தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அதில் நடித்த பொம்மன் இரானியை Tag செய்துள்ளார். அவரும் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கரீனா கபூரின் வீடியோவில், அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி மூவரும் சிகப்பு கலர் டீ ஷர்ட் அணிந்து அமர்ந்திருக்க பின்னால் ‘இடியட்ஸ்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

காமெடிக்காக கரீனா கபூர் இந்த வீடியோவை பதிவு செய்திருந்தாலும், 3 இடியட்ஸ் – 2 விரைவில் உருவாகும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

KD – The Devil (Kingdom) கன்னடப் படத்தில் ஷில்பாஷெட்டி

யக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள கன்னடத் திரைப்படம் KD – The Devil ஆகும். காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் படத்தை கே.வி.என்.புரொடக்ஷன் தயாரித்துள்ளது. KD – The Devil 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சுமார் 18ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கன்னடப் படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து “ராஜ்யங்களுக்கிடையே நடக்கும் ஒரு மாபெரும் போரைப் பற்றிய கதை இது. ஒவ்வொரு ராஜ்யத்துக்கும் ஒரு சத்தியவதி தேவை. இந்த KD – The Devilயில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது” என ஷில்பா கூறியுள்ளார்.

சூரரைப் போற்று! (இந்தி ரீமேக்)

தா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சூரரைப் போற்று.’ கொரோனா முடக்கம் காரணமாக இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியானது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த இயக்குநர் கதா கொங்கரா இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் அக் ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சூர்யா – ஜோதிகாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்தியில் தலைப்பிடப்படாத இப்படம் செப்டெம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப் பட்டுள்ளது.

டாப்ஸியின் படங்களைப் புறக்கணிக்க முயற்சி!

டிகை டாப்ஸி, இந்திப் படங்களில் இப்போது அதிக கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் டாப்ஸி கவர்ச்சியான ஆடை அணிந்து, கழுத்தில் மகாலெட்சுமி உருவத்துடன் கூடிய நெக்லஸ் அணிந்திருந்தார்.

இந்துக் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை கவர்ச்சி ஆடையுடன் எப்படி அணியலாம்? என சமூக வலைத் தளங்களில் பலர் கடுமையாக விமரிசித்துள்ளனர். டாப்ஸியின் படங்களைப் புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள காரணத்தால், டாப்ஸிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம், இந்த விஷயத்துக் காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதெனக் கூறியுள்ளார் டாப்ஸி!

(‘அவரவர் விருப்பத்தைத் தடை செய்ய இயலாது!’)

logo
Kalki Online
kalkionline.com