நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ளப்போகிறாரா? பரவும் தகவல்!

நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ளப்போகிறாரா? பரவும் தகவல்!
Updated on

நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் பரவி வருகிறது.

கோலிவுட்டில் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. அதைத் தொடர்ந்து 20 படங்களுக்கும்மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதில் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து, நவயுகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், என அனைத்து மொழிப் படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபலமானார்.

கிட்டத்தட்ட 17 வருடங்களாக நாயகியாக வலம் வந்த மீனா, 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு.

இந்நிலையில், மீனாவின் கணவர், கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மறைந்ததையடுத்து, இச்சம்பவம், அனைவரையுமே சோகத்திற்குள்ளாக்கியது. அந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறார் நடிகை மீனா.

இந்நேரத்தில் நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. மீனாவிற்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணம் செய்ய அவர் சம்மதித்ததாகவும், குடும்ப நண்பரையே திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

இவ்வாறு தகவல்கள் பரவினாலும், இதுகுறித்து நடிகை மீனா தரப்பில் இந்த செய்தியை முற்றிலும் மறுத்ததோடு, இது வதந்திதான் என்று கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com