கமல் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான அவ்வை சண்முகி படத்தின் பெயருக்கான காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
தமிழ் சினிமாவின் ஒரு வேர் என்று சொன்னால் அது கமலஹாசன்தான். எத்தனையோ உலகப்படங்களைக் கொடுத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பக்கலை, மேக்கப் போன்ற அனைத்திலும் சிறந்தவராக இருந்த கமலை தமிழ் சினிமாவின் வேர் என்று சொன்னால்தான் சரி. இப்போது அந்த வேரின் வலிமையால் தென்னிந்திய சினிமா பெரிய அளவு வளர்ச்சிக் கண்டிருக்கிறது.
அந்தவகையில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்தான் அவ்வை சண்முகி. இப்படத்தில் கமல், மீனா, மணிவண்ணன் ஆகியோர் நடித்திருப்பர். கமல், பெண் வேடத்தில் நடித்திருப்பார். படம் முழுக்க முழுக்க காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் நகரும். இன்றும் பலரின் ஃபேவரெட் படமாக இருந்து வருகிறது.
இப்படத்தில் டெலிபோனில் கமல் பேசும்போது உங்கள் பெயர் என்ன என்று கேட்பார்கள், அப்போது ஒரு பெயர் பலகையில் அவ்வை சண்முகம் என்று இருக்கும், அதைப் பார்த்து அவ்வை சண்முகி என்று கூறுவார். இப்படித்தான் அந்த படத்தின் பெயரும் கமல் லேடி கெட்டப் பெயரும் வந்தது என்று நினைப்பார்கள். அதுதான் இல்லை.
சினிமாவுக்கு முன்னாள் மக்களைக் கவர்ந்த ஒன்றுதான் மேடை நாடகம். அந்த நாடக துறையில் பெயர் போன ஒருவர்தான் டி கே சண்முகம். இவர் பெண் வேடமிட்டு ஔவையாராக நடிப்பதில் சிறந்தவர். வயதான பெண் கேரக்டர் என்பதால், கன்னங்கள் ஒட்டிப் போனால்தான் அந்த மாதிரி தோற்றம் முகத்தில் வரும் என்பதற்காக தன்னுடைய கடைவாய் பற்களையே பிடுங்கிக் கொண்டாராம். நாடக துறையில் அவருக்கு இருந்த அந்த பற்று, கமலஹாசனை வியப்படைய செய்ததாம்.
நாடகத் துறையில் அவர் செய்த அர்ப்பணிப்புக்காகத்தான் கமல் அந்த படத்திற்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
பல படங்களில் கமலஹாசன் நடிப்பதில் மட்டுமின்றி தன்னுடைய முழு பங்கை அனைத்து துறைகளிலும் காண்பித்திருப்பார் என்பதால் இவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் படத்தின் இயக்குனர் இப்பெயரை வைத்தாரா அல்லது கமல் வைத்தாரா என்பதில்தான் சந்தேகமே.