டைரக்டர் ஷங்கர் படத்தின் தலைப்பு இதுவா?

டைரக்டர் ஷங்கர் படத்தின் தலைப்பு இதுவா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். இவரது அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் லீக்காகியுள்ளது.

இவரது இயக்கத்தில் 2018ல் ரஜினி நடிப்பில் '2.0' திரைப்படம்தான் கடைசியாக வெளியான திரைப்படம். இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகவே திரையில் மிரட்டியது.

அதைத்தொடர்ந்து, நடிகர் கமல் கூட்டணியில் 'இந்தியன் 2' படத்தை இயக்க ஆரம்பித்த நிலையில், சில பல பிரச்சினைகளால் படப்பிடிப்பு சில காலமாகவே தள்ளிப்போக, தற்போது மீண்டும் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தெலுங்கு ஸ்டார் நடிகரான ராம் சரணுடன் இணைந்து 'RC15' புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில், நாயகன் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படும் நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் லீக்காகியுள்ளது.

அதன்படி, இப்படத்துக்கு தலைப்பு ‘CEO’ என்று வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரியவருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com