மனிஷா யாதவ்-ஐ சீண்டினாரா சீனு ராமசாமி.. என்ன நடந்தது?

மனிஷா யாதவ்,சீனு ராமசாமி
மனிஷா யாதவ்,சீனு ராமசாமி
Updated on

மீபமாக நடிகைகள் மீது நடந்த பாலியல் குற்றசசாட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்சசியில் நடிகை விசித்ரா பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததால் தான் சினிமா துறையை விட்டு விலகியதாக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய கீழ்த்தரமான பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து தர்பூது நடிகை மனிஷா யாதவ் இயக்குனர் சீனுராமசாமி குறித்து பகிர்ந்த பதிவு ஒன்று திரையுலகில் பேசும்பொருளாகியுள்ளது.

நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக வலைப்பேச்சு பத்திரிகையாளர் பிஸ்மி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் மனிஷா தனக்கு நன்றி கூறிய வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார். அப்போது தான் பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் ஏன் எனக்கு நன்றி கூற போகிறார் என தெரிவித்திருந்தார்.மீண்டும் மனிஷா யாதவ் தன்னுடன் இணைந்து பணியாற்றக் கூடும் என சீனு ராமசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ள போஸ்ட் அனைவரையும் அதிர்சசியில் ஆழ்த்தியுள்ளது. அதில், மேடையில் இருந்த அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன்.

மற்றபடி அவர் பற்றி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் சொன்ன எந்த கருத்தில் இருந்தும் மாறுபடவே இல்லை எனக் கூறியுள்ளார். தன்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதுமே இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறி சீனு ராமசாமி சார் நீங்க சொல்றது தப்பு எனவும் கூறியுள்ளார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com