ஜெயிலர்-2 வில் மிஸ் ஆனது தமன்னா தான் - ரஜினிகாந்த் வருத்தம்!

ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தமன்னா குறித்த ரகசியங்களை உடைத்த ரஜினி.
Jailer 2
jailer 2 RajiniSun pictures
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள ஜெயிலர்- 2 திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிகவும் எளிமையாக சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த படத்தின் ஒரு சில பாடல்கள் முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "ஜெயிலர் திரைப்படம் பூதாகரமான ஹிட்டானது , அந்த திரைப்படத்திற்கு சரிசமமான படத்தை கொடுக்கணும் அல்லது அதைவிட பெரிய திரைப்படத்தை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாவிட்டால் முதல் பாகத்தோடு கம்பேர் செய்வார்கள், என்று யோசித்தோம். நெல்சன் படத்தின் அறிமுகக் காட்சி இவ்வாறு இருக்கும், இன்டர்வெல் அதைவிட நன்றாக இருக்கும் என்று சொன்னார். வாழ்க்கையில் சேலஞ்ச் இருக்க வேண்டும். சும்மா ஓடிக்கொண்டே இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

பொதுவாக காமெடி சீன் சூட்டிங் செய்யும் போது, கவுண்டமணி கூட இருந்தா நடிக்கவே முடியாது, அவ்வளவு சிரிப்பு வரும். அதே மாதிரி இந்த படத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் நடித்தேன். வித்யா பாலன் ரொம்ப சூப்பராக நடிச்சிருக்காங்க , அவங்க கூட ஒரு முழு படமும் நடிக்க ஆசையாக இருக்கிறது," என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் நடித்துள்ளார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அவரை அணுகிய போது, "ரஜினிக்கு நான் வில்லனா? அவர்கிட்ட நான் அடி வாங்கணுமா?" என்று கூறி விரட்டி இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் நான் அவரை சந்தித்தபோது, இது பற்றி கேட்டேன்."நீ சொன்னா நடிக்கிறேன். ஆனால், நீ என்னை அடிக்க கூடாது, கொல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அது எனக்கு தெரியாது, நான் இயக்குனரிடம் கேட்கிறேன் என்று கூறினேன். ஆரம்பத்தில் நெல்சன், வில்லனை அடிக்காமல் எப்படி? என்று யோசித்தார். ஆனால், அதற்கேற்றார் போல் காட்சிகளை அமைத்து விட்டார்.

Rajini Nelson jailer2
Rajini Nelsonsun pictures

இந்த படத்துல மிஸ் ஆனது தமன்னா மட்டும்தான். நெல்சன் கிட்ட சொன்னேன். இரண்டு பாட்டில் ஒரு பாட்டுக்கு தமன்னாவை ஆட வைங்கன்னு சொன்னேன். அதுக்கு நெல்சன் உங்களுக்கு பிடிச்சிருக்குன்றதுக்காக எல்லாம் அவங்கள வச்சுக்க முடியாது சார், என்று சொல்லிவிட்டார். எனக்கு பிடிக்கும்னு நினைச்சிருந்தா? நான் 40 வருஷத்துக்கு முன்னாடியே பெங்களூருக்கு போய் இருப்பேன். மக்களுக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்தினால் தான் இன்று வரை நடிச்சிட்டு இருக்கேன், என்று பேசினார்.

ரஜினி திரைப்படத்தில் டென்ஷன் ஏற்படுத்திய விஷயத்தை பற்றியும் பேசியுள்ளார். "இந்த படத்துல ரொம்ப டென்ஷன் பண்ணது அனிருத் தான். அவர் வெளிநாட்டு கான்சர்ட், பாரடைஸ் திரைப்படம் என்று பிஸியா இருந்தார். அதனால் நெல்சன் ரொம்ப டென்ஷனாக இருந்தார். ஆனால், படத்தின் பாட்டு எல்லாம் நீங்கள் கேட்டிருப்பீர்கள் ஒவ்வொன்றும் மணி மாதிரி இருக்கும்.

எனக்கு 76 வயதாகிவிட்டது , நிறைய பேர் கேக்குறாங்க, இன்னமும் எப்படி சார் ஓடிட்டு இருக்கீங்கன்னு? எல்லாவற்றிற்கும் காரணம் என்னை வாழ வைக்கும் என் தெய்வங்களான என் ரசிக பெருமக்கள் தான். அவங்க இல்லை என்றால் நான் ஒன்றுமே கிடையாது. அவர்களுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி சொல்கிறேன், என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com