'Learn Na'vi': ஒரு சினிமாவுக்காக உருவான மொழி - 'அவதார்' படத்தின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை!

James Cameron and avatar movie
James Cameron and avatar movieImg credit: AI Image
Published on

திரைக்கதைக்காக ஒரு செட் போடுவது அல்லது ஒரு புதிய உலகத்தை கிராபிக்ஸில் உருவாக்குவது என்பது சாதாரண விஷயம். ஆனால், ஒரு படத்திற்காக ஒரு புதிய மொழியையே உருவாக்குவது, அதுவும் இலக்கணம், உச்சரிப்பு என அத்தனையையும் பக்காவாகச் செய்வது என்பது மிகப் பெரிய சவால். இதைச் சாதித்துக் காட்டியவர் தான் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

அவதார் திரைப்படம் வெளியானபோது அதன் காட்சிகளுக்காக மட்டும் மக்கள் வியக்கவில்லை; அந்த பண்டோரா கிரகத்தில் வசிக்கும் 'நாவி' மக்கள் பேசிய அந்த விசித்திரமான மொழி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜேம்ஸ் கேமரூன் ஒரு தீவிரமான படைப்பாளி. அவர் நினைத்திருந்தால், நாவி மக்களை ஏதோ ஒரு புரியாத சத்தத்தை பேச வைத்திருக்கலாம். ஆனால், அந்த உலகம் நிஜமானது என்ற உணர்வை ரசிகர்களுக்குக் கொடுக்க அவர் விரும்பினார். ஒரு இனம் இருக்கிறது என்றால், அவர்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்க வேண்டும், அந்த கலாச்சாரத்தைத் தாங்கிப் பிடிக்க ஒரு மொழி வேண்டும் என்பது கேமரூனின் பிடிவாதம்.

இதற்காக அவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மொழியியலாளர் டாக்டர் பால் ப்ரோமர் என்பவரை அணுகினார்.

டாக்டர் பால் ப்ரோமர் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இணைந்து சுமார் நான்கு ஆண்டுகள் உழைத்து இந்த 'நாவி' மொழியை உருவாக்கினர்.

ஆரம்பத்தில் வெறும் 30 வார்த்தைகளில் தொடங்கிய இந்த மொழி, படம் ரிலீஸ் ஆகும் போது 1000 வார்த்தைகளுக்கும் மேல் வளர்ந்திருந்தது.

இதையும் படியுங்கள்:
ரிவர்ஸ் கியர் 5.0 -தமிழ்த் திரையுலகின் பரிணாம வளர்ச்சி!
James Cameron and avatar movie

இந்த மொழிக்கு என்று தனியாக பெயர்ச்சொல், வினைச்சொல் மற்றும் வாக்கிய அமைப்புகள் என முறையான இலக்கணம் உண்டு.

இந்த மொழி கேட்பதற்கு அந்நியமாக இருக்க வேண்டும், அதே சமயம் மனித நடிகர்களால் இதைச் சுலபமாக உச்சரிக்கவும் முடிய வேண்டும் என்பது கேமரூனின் நிபந்தனை.

படத்தில் நடித்த சாம் வொர்திங்டன் மற்றும் ஜோ சல்டானா போன்ற நடிகர்கள் இந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்காகப் பல மாதங்கள் பயிற்சி எடுத்தனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் உச்சரிப்பு தவறினால், அதைத் திருத்த மொழியியல் நிபுணர்கள் அங்கேயே இருப்பார்கள்.

படம் வெளியான பிறகு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த மொழியைக் கற்கத் தொடங்கினர். இன்று 'Learn Na'vi' என்ற இணையதளங்கள் மூலம் பலரும் இந்த மொழியை சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டு வருகின்றனர். ஒரு கற்பனை மொழி, நிஜ உலகில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும் - நடிகை ரேவதி..!
James Cameron and avatar movie

'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்திற்காக இந்த மொழி மேலும் விரிவுபடுத்தப்பட்டது. கடலுக்கு அடியில் வாழும் நாவி மக்களுக்காகச் சைகை மொழிகளும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டன.

ஜேம்ஸ் கேமரூனின் இந்த முயற்சி, சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி, அது ஒரு புதிய உலகத்தையே உருவாக்கும் கலை என்பதை நிரூபித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com