

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தீவிர அரசியலில் குதித்து உள்ளதால் , சினிமாவில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலக உள்ளார். இந்நிலையில் விஜய் தனது இறுதி திரைப்படமாக 'ஜனநாயகன் ' இருக்கும் என்று அறிவித்து இருந்தார். விஜயின் இறுதி படமாக இருப்பதால் , அதற்கான எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதற்கு முன் அவர் , நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த 'பீஸ்ட் ' திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல் , மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், கௌதம் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் , அன்பறிவு இந்த படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர் , மொத்தமாக படத்தில் 10 சண்டைக் காட்சிகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சதுரங்க வேட்டை புகழ் ஹெச்.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு பணிகள் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் பாடிய 'தளபதி கச்சேரி'என்ற பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பாடலை தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முன்பு முடிவு செய்திருந்தனர். ஆனால் , கரூர் துயர சம்பவத்தின் காரணமாக பாடல் வெளியிடு தள்ளி போனது. இந்த பாடல் விஜய் பாடிய இறுதிப் பாடல் என்பதால் ,கேட்க எப்படி இருக்கும் என்று ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர். பாடல் ரிலீஸை முன்னிட்டு சமூக வலைதளங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இரு தினங்களுக்கு முன் ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று விஜயின் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் விஜயின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விபாபாரம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி திரைப்படக் குழுவினர் அறிக்கையில் , படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் திரைபரங்க உரிமை மொத்தமாக 115 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். படத்தின் ஓடிடி உரிமையை 110 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகை கொடுத்து தமிழ் நாட்டின் முன்னணி சேனல் ஒன்று வாங்கியுள்ளதாக அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் வெளி வந்துள்ளது.படத்தின் ஆடியோ உரிமை 35 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக வெளியீட்டுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படம் 260 கோடி வரை விற்பனை ஆகியுள்ளது.