

சிறுவயதில் தனக்கு நேர்ந்த ஒரு வேடிக்கையான 'கடத்தல்' சம்பவத்தை நினைவு கூறும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் வீடியோவைப் பற்றிய பேச்சு தான் இப்போது வைரல் டாக்.சிறு வயதில் ஸ்கூல்ல இருந்து வரும் போது என்னை கடத்தப் பார்த்தாங்க என்றும் அதற்கு காரணமே அப்பா விஜய் தான் என்று எவ்வித மிகையுமின்றி யதார்த்தமாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
தமிழக மக்களைக் கவர்ந்த நடிகர் விஜய் தற்போது முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சயின் மனதை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ மீண்டும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த கியூட்டான இளம் திரைப்பட இயக்குநர் மகிழ்ச்சியுடன் ஒரு சிறுவனிடம் குழந்தை போல் பேசுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
ஜேசன் குழந்தைகளிடம் மிகவும் அன்பாகப் பழகுவதைக் காணும் போது குழந்தைகளிடம் அன்பாக பழகும் அவரது தந்தை விஜய்யின் பண்பை மிகவும் ஒத்திருப்பதாக அவரது பெரும்பாலான ரசிகர்கள் கருதி வீடியோவைப் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறிப்பாக ஜேசன் இயக்கும் முதல் படத்தின் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் வேளையில் இந்த வீடியோ ரசிகர்களிடையே புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.இந்த மாதம் இறுதியில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சிறு வயதில் அப்பாவால் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் ஜேசன் செம க்யூட்டாக பேசியது ரசிகர்களுக்கு ஆனந்த ஆச்சர்யம் தந்துள்ளது.
ஆம்.. தனது தாய் சங்கீதா மற்றும் தந்தை விஜய்க்கு இடையே இருக்கும் பிரச்சினையில் தலையிடாமலும் இதுவரை முதல்வரான தந்தையுடன் இருப்பது போன்ற எவ்வித புகைப்படம் , கருத்து மற்றும் வீடியோ வெளிவராத நிலையிலும் ஜேசன் சஞ்சய் தனது தந்தையுடனான அனுபவத்தை வெளிப்படுத்தியது அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
தந்தை விஜயை நேசித்தது போலவே மக்கள் ஜேசனின் வசீகரத்தையும் எளிமையையும் மெச்சுகின்றனர்.அவரது முதல் இயக்கப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோவின் வெளியீடு அவரின் மீதான ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது.இந்த வீடியோவில் ஜேசன் சஞ்சய் தனது அரிதான குழந்தைப்பருவ நினைவைப் பகிர்ந்துகொள்கிறார்.
அந்த வீடியோவில், ஜேசன் தனது பள்ளி நாட்களிலிருந்து ஒரு வேடிக்கையான நினைவை பேசுகிறார். அதில் நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் பேசிக் கொண்டிருந்த ஜேசன் "சிறு வயதில் உங்க அப்பா என்னை கார்ல கடத்தப் பார்த்தாரு. எப்போதுமே எங்க அப்பா செக்யூரிட்டியை அனுப்பி ஸ்கூல்ல இருந்து என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. ஆனால், உன்னோட அப்பா என்னை வந்து கடத்திட்டுப் போறது போல தூக்கிச் சென்றார் " என்று சொல்ல உடனே எதிரிலிருந்த ஜெமினி மணி " நான் தீவிர தளபதி ஃபேன், எப்படியாவது தளபதியை பார்க்கணும்னு செக்யூரிட்டிக்கு பதிலாக நான் சென்று சஞ்சயை தூக்கிவிட்டேன். ஆனால் அவரோ ஸ்கூல் பேக் எல்லாம் வீசிவிட்டு அப்படி எட்டி உதைத்து தப்பிக்க பார்த்தார்" என்று ஜெமினி மணி கூறியவுடன் "ஆமாம் அப்போது நான் சிறு பையன்..அப்படித்தான் நடக்கும் " என்பது போன்று சஞ்சய் அழகான புன்னகையுடன் கூறுகிறார். அந்த முழு அனுபவத்தையும் அவர் ஒரு நகைச்சுவையான தொனியில் விவரித்ததால், அவரைச் சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். கதையைப் பகிர்ந்துகொண்டபோது, தான் விஜய்யின் மகன் என்பதால் பாதுகாப்பு படையினரால் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்
இந்த நகைச்சுவையான சம்பவம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. ஆனாலும் ஜேசன் சஞ்சய் தனது தந்தையைப் பற்றி கவனமாகக் குறிப்பிடுவதை ரசிகர்கள் கவனிக்கிறார்கள். உரையாடல் முழுவதும், ஜேசன் பாதுகாப்பு ஏற்பாடுகளை விளக்கும்போது மட்டுமே அப்பா என விஜய்யைப் பற்றிக் குறிப்பிட்டு, மற்ற நேரங்களில் தனது வேடிக்கையான சிறுவயது சம்பவத்தில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தார். உடனிருந்த ஜெமினி மணிதான் விஜயைப் பற்றியும் அவர் மீதான தனது அபிமானத்தைப் பற்றியும் அதிகமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய் தந்தையைப் பற்றி பேசுவதை லாவகமாக தவிர்த்து விட்டது புரிகிறது.
ஆனால் ஒன்று.. குழந்தைகளை தனது ரசிகர்களாக்கிய தளபதி விஜய் போலவே குழந்தைகளை அவரது மகனாகிய ஜேசன் சஞ்சயும் எளிதாக கவர்ந்து விடுவார் என்பது அவரது பேச்சையும் உடல் மொழியும் பார்த்தாலே தெரிகிறது.
அப்பா விஜய்யை போலவே மகன் ஜேசன் சஞ்சய்க்கும் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தாலே தெரிகிறது என்றும் தொடர்ந்து குழந்தைகளை கொஞ்சுவது, குழந்தை நட்சத்திரங்களுடன் ஜாலியாக பேசி மகிழ்வது என அசத்தி வரும் ஜேசன் இப்போதே தன்பக்கம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
குறிப்பாக இயக்குநராக அல்லாமல், ஹீரோவாக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகி இருந்தால் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அவர் ஃபேவரைட் ஆகிவிடுவார் என்று கருத்து கூறி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, 2026 ஜூலை 31 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.