நடிகர் டூ அரசியல்வாதி: மீண்டும் சண்டியராக களமிறங்கும் கமல்! இந்த முறை எதிர்ப்புகளை அடக்குவாரா?

2004-ல் சண்டியர் தலைப்பு சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் விருமாண்டி பெயர் மாற்றத்திற்குப் பின் மீண்டும் தலைப்பாகும் சண்டியர் பற்றிய அலசல்.
sandiyar
sandiyar kamal filmRKFL
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

நடிகர் கமல்ஹாசன் தான் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்று பெயர் வைத்தது, பெரிய பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அருண் குமார் இயக்க உள்ளார். இவர் இதற்கு முன் சித்தா , வீர தீர சூரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். கமலின் 237 திரைப்படமாக உருவாகும் சண்டியரை , அவரே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பேனரில் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சண்டியர் என்று பெயர் வைத்ததை தொடர்ந்து , இதற்காக மீண்டும் ஏதேனும் பிரச்சனைகள் கிளம்புமா? என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். கமலுக்கு சண்டியர் என்ற பெயரில் திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆவல் மிக நீண்ட காலமாகவே இருந்துள்ளது .இதற்கு முன்னரும் கமல் சண்டியர் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தொடங்கியிருந்தார் . சண்டியர் என்ற பெயர் தென் மாவட்டங்களில் மற்றவர்களை அடக்கி வைக்கும் வீரமான ஆண்களை குறிக்கக்கூடிய சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பெயருக்கு 'யாருக்கும் அடங்காதவன்' என்ற பொருளும் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் பரவலாக புழக்கத்தில் உள்ள இந்த பெயரை வைத்து, 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் திரைப்படத்தை தொடங்கினார். ஆனால், அப்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி, சண்டியர் என்ற பெயர் வைத்தால், அந்த திரைப்படத்தில் திரையரங்குகளில் வெளியிட விடமாட்டோம் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து கமலஹாசன் கிருஷ்ணசாமியை விமர்சித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த பிரச்சனையில் தனக்கு உதவ வேண்டும் என்று அப்போதைய முதல்வர் செல்வி. ஜெ ஜெயலலிதாவையும் அவர் சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் , அப்போது அவருக்கு அரசியல் ரீதியாகவும் , திரைப்பட கலைஞர்கள் சார்பிலும் ஆதரவு கிடைக்கவில்லை. இறுதியில் கமல் சண்டியர் திரைப்படத்தின் பெயரினை 'விருமாண்டி' என்று மாற்றி திரையரங்குகளில் வெளியிட்டார். ஆயினும் படத்தில் 'சண்டியரே சண்டியரே' என்ற பாடல் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது.

Sandiyar
sandiyar Transformed Virumandi facebook, RKFL

ஆரம்பத்தில் 'விருமாண்டி' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் , சில நாட்களில் பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று திரைப்படம் வெற்றி பெற்றது. திரைப்பட விமர்சகர்கள் பலரும் படத்தின் நோக்கத்தையும் கதையின் கருவையும் பாராட்டினர் , அதே நேரம் படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இருந்ததையும் சுட்டிக்காட்டினர். தென் கொரியாவில் நடைபெற்ற புச்சியான் சர்வதேச ஃபேன்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ஆசியாவின் சிறந்த இயக்குனர் விருது கமலுக்கு வழங்கப்பட்டது.

தற்போது 22 ஆண்டுகள் கழித்து கமல் மீண்டும் சண்டியர் பெயரை தூசு தட்டியுள்ளார். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியான அந்த போஸ்டரில் , ஒரு கார் ஜன்னல் வழியாக துப்பாக்கியை கீழே தொங்க விட்டபடி வெளியில் கமல் நிற்கிறார். கார் கண்ணாடிகளில் ரத்தம் வழிவதைப் போன்று படம் இடம் பெற்றுள்ளது. இத்தனை வருடங்களில் கமலின் தனிப்பட்ட செல்வாக்கும் மாறியுள்ளது , அவர் தற்போது அரசியல்வாதியாக மாறி ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவும் அவருக்கு இருக்கிறது.