கமல்ஹாசனின் ‘சண்டியர்’ பட சர்ச்சை... மீண்டும் திரும்பும் பெயர் பின்னணி என்ன?

2003-இல் எதிர்ப்புகளைச் சந்தித்து ‘விருமாண்டி’யாக மாறிய பெயர் இப்போது புதிய படத்திற்கு சூட்டப்பட்டதன் பின்னணி.
சண்டியர்
சண்டியர்
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு தலைப்பு சில நேரங்களில் ஒரு திரைப்படத்தின் அடையாளமாக மட்டுமல்ல; அதன் பின்னணியில் மறக்க முடியாத வரலாறும் இருக்கும். அப்படியொரு சுவாரசியத்துடன் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் ‘சண்டியர்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழைய நினைவுக்கும் புதிய படத்துக்கும் என்ன தொடர்பு? தெரிந்துகொள்வோம்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்துக்கு ‘சண்டியர்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நவம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்காலிகமாக ‘KH237’ என்று குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தை இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்குகிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்புடன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போஸ்டரில் நரைத்த தலைமுடி, தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் காணப்படுகிறார். ரத்தக்கறை படிந்த வாகனத்தின் அருகே துப்பாக்கியுடன் அவர் அமர்ந்திருக்கும் காட்சி, படத்தின் மனநிலையைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘Revenge can only be settled in BLOOD’ – அதாவது, பழிக்குப் பழி ரத்தத்தால் மட்டுமே தீரும் என்ற வாசகமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

இதனால் பழிவாங்கலை மையமாகக் கொண்ட கதையா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், படத்தின் கதைக்களம், கமல்ஹாசனின் கதாபாத்திரம், மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களைத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. எனவே போஸ்டரை மட்டும் வைத்து கதையை உறுதியாகக் கூற முடியாது.

இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ போன்ற படங்களை இயக்கியவர். குறிப்பாக ‘சித்தா’ திரைப்படம் உணர்வுபூர்வமான கதையமைப்பால் கவனம் பெற்றது. அவரும் கமல்ஹாசனும் முதன்முறையாக இணைவது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

சண்டியர்
சண்டியர்

இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் வடிவமைக்கின்றனர். ஒளிப்பதிவை சுனில் கே.எஸ். கவனிக்கிறார். கலை இயக்குநராக சி.எஸ். பாலச்சந்தரும், ஆடை வடிவமைப்பாளராக அம்ரிதா ராமும் பணியாற்றுகின்றனர். கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்க, எஸ். டிஸ்னி இணைத் தயாரிப்பாளராக உள்ளார்.

‘சண்டியர்’ என்ற பெயருக்கு ஒரு பழைய பின்னணியும் உண்டு. 2003-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம் முதலில் ‘சண்டியர்’ என்ற பெயரில்தான் அறிவிக்கப்பட்டது. அந்தத் தலைப்புக்கு எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் எழுந்ததைத் தொடர்ந்து, படம் ‘விருமாண்டி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2004-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், கிராமியப் பின்னணியில் மரண தண்டனை, வன்முறை, மனித உறவுகள் போன்ற கேள்விகளை முன்வைத்தது. இப்போது அதே பெயர் வேறொரு புதிய திரைப்படத்துக்குச் சூட்டப்பட்டிருப்பது சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழிகளில் நடித்து, இயக்கி, தயாரித்து வந்த கமல்ஹாசன், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தவர். ஆகவே, இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வேடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அட்டவணை, வெளியீட்டுத் தேதி ஆகியவையும் இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் மூலம் அனிருத் மீண்டும் கமல்ஹாசனுடன் இணைகிறார் என்பது மற்றொரு சுவாரஸ்யமான அம்சம். ஏற்கனவே விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். அந்த படங்களின் இசை ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் " சண்டியர்" படத்தின் இசை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
கமல் ஹாசன் ஒரு மனிதரா இல்லை சினிமாவா? வியக்க வைக்கும் சாதனை ரகசியங்கள்!
சண்டியர்

குறிப்பாக அன்பறிவு இரட்டையர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பதால் அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அருண்குமார் தனது முந்தைய படங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் அழுத்தமான திரைக்கதைக்கும் முக்கியத்துவம் அளித்தவர். அவருடைய இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது புதிய அனுபவமாக அமையும். தலைப்பின் பழைய வரலாறு, புதிய தொழில்நுட்பக் கூட்டணி எனப் பல அம்சங்களுடன் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் மற்றொரு திரைப்படம் " இந்தியன் 3 ". ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அடுத்த பாகம் குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் படமும் அவரது திரைப்பயணத்தில் முக்கியமானதாக அமையவுள்ளது. இவ்வாறு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் "சண்டியர்" அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி இயக்குநர் கூட்டணியில்... ஹன்சா என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட 4 அதிரடிப் படங்கள்!
சண்டியர்

கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் இந்த படம் மற்றுமொரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. நடிப்புடன் தயாரிப்புப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், இளம் இயக்குனர்களுடன் இணைந்து புதிய கதைக்களங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே "விக்ரம்" படத்தின் மூலம் புதிய தலைமுறை ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது எஸ்.யு அருண்குமாருடன் இணைந்திருப்பது அத்தகைய மற்றொரு முயற்சியாக அமைந்துள்ளது.

குறிப்பாக "சித்தா" போன்ற அழுத்தமான கதையம்சம் கொண்ட படத்தை இயக்கியவருடன் கமல்ஹாசன் இணைவதால், ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறின்றனர்‌. படத்தின் முழுமையான நடிகர் பட்டியல், படப்பிடிப்பு விவரங்கள் வெளியாகும் போது அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

படத்தின் கதை, நடிகர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெளியான முதல் தோற்றமும் தொழில்நுட்பக் குழுவும் மட்டுமே இப்போதைக்கு நமக்குத் தெரிந்த தகவல்கள். பழைய பெயரின் வரலாற்றையும் புதிய கூட்டணியையும் கொண்ட ‘சண்டியர்’, கமல்ஹாசனின் அடுத்த திரைப்பயணத்தில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

கமல்ஹாசனின் புதிய பட அறிவிப்புடன், கடந்த காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பழைய ‘சண்டியர்’ பெயரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் திருப்தி.