கே ஜி எப் ஹீரோவின் அடுத்த பட அப்டேட்!!

Yash19
Yash19

டிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படங்கள் அவருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. இதையடுத்து அவரது யாஷ்19 படம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் படங்கள் ஏற்படுத்தின.

முன்னதாக கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் கேஜிஎப் யாஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில் பான் இந்தியா ஸ்டாராகவும் உயர்ந்துள்ளார் யாஷ். குறிப்பாக கேஜிஎப் 2 படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.

இதனால் அடுத்தப்படத்தையும் சிறப்பாக கொடுக்க வேண்டி அதிகமான கதைகளை யாஷ் நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிரபல மலையாளப் பட இயக்குநர் கீது மோகன்தாசுடன் யாஷ் இணைந்துள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக யாஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக 3 நாயகிகள் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு டாக்சிக் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கேஜிஎஃப் 3 திரை கதை தயார் இயக்குனர் கொடுத்த அப்டேட்!
Yash19

மேலும் இந்தப் படம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com