
பண்டிகை காலங்கள் என்றாலே பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் திரைக்கு வரும்பொழுது ரசிகர்களின் கொண்டாட்டமும் ஆரவாரமும், அதிகமாகவே இருக்கும். அந்த வரிசையில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளில் புது புது திரைப்படங்கள் திரைக்கு வரும் பொழுது பெரும் ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் எகிற வைக்கிறது. இந்த 2025 தீபாவளி பண்டிகைக்கு (deepavali 2025 movies) திரைக்கு என்னென்ன திரைப்படங்கள் வருகின்றன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1. பைசன் காளமாடன்:
கிராமத்து வாழ்வியலின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் உணர்வுபூர்வமாக தனது படங்கள் மூலம் வெளிப்படுத்தும் ஒப்பற்ற கலைஞன் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள். இதற்கு முன் வாழை என்ற திரைப்படத்தின் மூலம் தனது சிறு வயது வலிகளையும், வேதனைகளையும் கண் முன்னே காட்டி இருப்பார். இவரின் திரைப்படங்கள் எல்லாம் ஒரு தனி ரகம் என்றே கூறலாம்.
இப்போது இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பைசன் காளமாடன்' திரைப்படமானது அக்டோபர் 17 திரைக்கு வருகிறது. இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ராஜிஷா விஜயன் போன்றோர் நடித்துள்ளார்கள். கிராமத்து வாழ்வியலோடு சேர்ந்த ஒரு வீரனின் கபடி வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக இந்த பைசன் காளமாடன் அமைந்திருக்கிறது.
2. டீசல்:
இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் 'டீசல்'. இத் திரைப் படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, கருணாஸ், வினய், ரமேஷ் திலக் போன்றோர் நடித்துள்ளார்கள். இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் நல்ல கதை களத்தோடு வந்து தேசிய விருதையும் வென்றது. டீசல் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ஒரு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒரு வழியாக இந்த டீசல் திரைப்படம் அக்டோபர் 17 திரைக்கு வருகிறது என்பது உறுதியாகி உள்ளது. ஆக்சன், திரில்லர், அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த திரைப்படம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
3. டியூட்:
கால் வைத்த இடமெல்லாம் வெற்றி. இந்த வெற்றி அவருக்கு சாதாரணமாக கிடைத்ததில்லை அவரின் கடின உழைப்பிற்கும், அசாத்திய திறமைக்கும் கிடைத்தது என்றே கூறலாம். அப்படிப்பட்டவர் யார் என்று கேட்டால் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன்தான். தான் இயக்கிய லவ் டுடே, கோமாளி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கிரித்தீஸ்வரன் இயக்கத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் தான் டியூட். மேலும் இப்படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற கதைகளத்தில் இருக்கும் என்பதை இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளிக்காட்டியுள்ளது. இத் திரைப்படம் அக்டோபர் 17 திரைக்கு வருகிறது.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த மூன்று திரைப்படங்களில் எந்த திரைப்படம் ரசிகர்களின் மனதிலும் பொதுமக்கள் மனதிலும் இடம் பிடிக்கும் என்பதை.
கிராமத்து வாழ்வியலை கூறும் பைசன் காலமாடனா, இல்லை அதிரடி ஆக்சன் காட்சிகளோடு வரும் டீசலா, அதையும் தாண்டி காதல், ரொமான்ஸ் என்று இருக்கும் டியூட் திரைப்படமா..?
இந்த மூணு திரைப்படங்கள்ல ஹிட் ஆகும்னு நீங்க எதிர் பார்க்கிற திரைப்படம் எது என்பதை கமெண்ட்ல சொல்லுங்க..!