ரீ-ரிலீஸ் பட்டியலில் இணைந்த தளபதியின் 2 மெகா ஹிட் திரைப்படங்கள்!

thalapathy vijai Kushi & Sivakasi
thalapathy vijai
Published on

சினிமா துறையில் தற்போது ரீ-ரிலீஸ் கலாச்சாரம் சற்று மேலோங்கியுள்ளது. புதிய படங்களுக்கே போதுமான தியேட்டர்கள் கிடைக்காத நிலையில், பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பலவும் இலாபம் பார்க்க முடியாமல் தள்ளாடுவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் ரீ-ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால், இனி இந்தக் கலாச்சாரம் அதிகரிக்கத் தான் செய்யும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் தற்போது விஜய் நடிப்பில் வெற்றி வாகை சூடிய இரண்டு திரைப்படங்கள் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவிக்கும் விஜய் அரசியல் பக்கம் சென்று விட்டதால், இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அவரது கடைசி படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. இதனால் விஜய்யின் படங்கள் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸாகி வருகின்றன. அவ்வகையில் தற்போது குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரண்டு படங்கள் விரைவில் மீண்டும் ஒருமுறை திரையில் ரசிகர்களை மகிழ்விக்கப் போகின்றன.

கடந்த 2000-இல் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் குஷி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூலிலும் சாதனைப் படைத்தது. நடிகர் விஜய் காதல் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் குஷி திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அதேபோல் 2005 இல் பேரரசு இயக்கத்தில் விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான சிவகாசி படம் கமர்ஷியல் ஹிட் அடித்தது. இந்த இரண்டு படங்களையும் சூர்யா மூவிஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். கில்லி படத்தைத் தயாரித்தவரும் இவர் தான். கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆன கில்லி படம் ரூ.50 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது. ரீ-ரிலீஸ் ஆன படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது கில்லி தான். இந்த ஆண்டில் விஜய்யின் சச்சின் திரைப்படமும் ரீ-ரிலீஸானது.

இந்த வரிசையில் தற்போது குஷி மற்றும் சிவகாசி ஆகிய படங்கள் வரவுள்ளன. ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியும் ஜனநாயகன் படத்திற்கு முன்பாகவே இப்படங்கள் தியேட்டருக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? நசுக்கப்படுகிறதா சிறு பட்ஜெட் படங்கள்?
thalapathy vijai Kushi & Sivakasi

ஜனநாயகன் படத்திற்குப் பிறகு விஜய்யை திரையில் பார்க்க முடியாது என வருந்திக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரீ-ரிலீஸ் கலாச்சாரம் சற்று நிம்மதியை அளித்துள்ளது. இவன் பிறகும் விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

தயாரிப்பு நிறுவனமே ரீ-ரிலீஸ் செய்யத் தயங்கினாலும், ரசிகர்கள் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைப்பார்கள் போல. ஏனெனில் விஜய்க்கு தமிழ்நாடு முழுக்க பல இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இரட்டை இலாபம் என்றே சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தல, தளபதியை இயக்கிய பேரரசு, பயந்தது ஏன்?
thalapathy vijai Kushi & Sivakasi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com