‘ரகுவரன்: காலத்தை வென்ற ஒரு நட்சத்திரம்’ டீசர்: புகழ்பெற்ற நடிகரின் அறியப்படாத வாழ்க்கை பக்கங்கள்...

நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ‘ரகுவரன்: எ ஸ்டார் தட் டிஃபைட் டைம்’ என்ற ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Raghuvaran: A Star That Defied Time
Raghuvaran: A Star That Defied Timeimg credit - mathrubhumi.com
Published on

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் என்று பல நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் ரகுவரன்.

1996ம் ஆண்டு நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளான். ஆனால், ஆறு வருடங்களில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகர் ரகுவரன், உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் 2008-ல் காலமானார். ரகுவரன் மறைந்து 18 ஆண்டுகளாகும் நிலையில், அவரது திரைப்பயணம், வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘ரகுவரன்: எ ஸ்டார் தட் டிஃபைட் டைம்’ என்ற தலைப்பில், இந்த ஆவணப்படத்தை ஹாசிப் அபிதா ஹக்கீம் இயக்கியுள்ளார். அவரே இதை தயாரித்து அதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்.

இந்த டீசரில் நடிகரின் பல காணப்படாத கிளிப்புகள் மற்றும் அவரது படங்களின் திரைக்குப் பின்னால் உள்ள தருணங்கள் உள்ளன. "அவர் தமிழ் சினிமாவின் இணையற்ற இருப்பு" என்று டீசர் கூறுகிறது. அவர் 18 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு நடிகரைப் போல வாழ்வார், நடப்பார், பேசுவார், போராடுவார் என்று அவருடன் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

நடிகர் ரகுவரனின் காணப்படாத ஸ்டில்கள் மற்றும் கிளிப்புகள் இடம்பெறும் இந்தப் ஆவணப்படத்தில், ரகுவரனுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்களின் நேர்காணல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் தனது பணிக்காக அறியப்பட்ட ரகுவரன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் புரியாத புதிர், பாஷா, மிஸ்டர் பரத், மந்திர புன்னகை, பூவிழி வாசலிலே, அஞ்சலி, காதலன், சம்சாரம் அது மின்சாரம், முதல்வன், பாட்ஷா, ரட்சகன், யாரடி நீ மோகனி , மலையாளத்தில் வ்யூஹம் (Vyooham) மற்றும் கவச்சம் (Kavacham), தெலுங்கில் லங்கேஸ்வருடு (Lankeshwarudu), லத்தி மற்றும் ஆசாத், இந்தியில் லால் பாட்ஷா, சிவன், இசத்தார் ஆகியவை அவரது பிரபலமான படங்களில் சில.

‘இந்தப் படம் நாடக உலகில் அடியெடுத்து வைக்கும் ஒரு இளம் (ரகுவரன்) கனவு காண்பவரிலிருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சக்திவாய்ந்த நடிப்புகளை வடிவமைத்த ஒரு நடிகர் வரை அவரது பயணத்தின் வழியாக உங்களை அழைத்துச் செல்கிறது’ என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறினர்.

இதையும் படியுங்கள்:
நடிப்பு அசுரன் ரகுவரனின் ஆவணப்படம்!
Raghuvaran: A Star That Defied Time

அச்சுறுத்தும் வில்லன் முதல் ஆழ்ந்த முரண்பட்ட நெகட்டிவ் ஹீரோ வரை, துன்புறுத்தும் தந்தை முதல் விசித்திரமான தொலைநோக்கு பார்வையாளர் வரை, அவரது கதாபாத்திரங்களை உண்மையானதாகக் காட்டும் திறமையை கொண்டிருந்தார். ‘அவரது கண்கள், வார்த்தைகளால் முழுமையாகப் பிடிக்க முடியாத கதைகளைச் சுமந்து சென்றன.’

‘ரகுவரன்: எ ஸ்டார் தட் டிஃபைட் டைம்' ஆவணப்படம் சாதாரணமாக இருக்க மறுத்த ஒரு கலைஞரின் கதையை உயிர்ப்பிக்கிறது. அவரது நடிப்புகள் இன்னும் காலத்தின் வழியாக எதிரொலிக்கின்றன, மரபுகளை மீறி தனது கலையின் மூலம் வாழ்ந்த ஒரு புராணக்கதைக்கு அஞ்சலி.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள ‘ரகுவரன்: எ ஸ்டார் தட் டிஃபைட் டைம்’ ஆவணப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இசையில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுவரனின் மகன் ரிஷி, சமீபத்தில் தன்னுடைய தந்தை பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

நடிகர் ரகுவரனும் சினிமாவின் நுழைந்த ஆரம்ப காலத்தில் இசையின் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் அவர் நடிகராக மாறினார்.

இதையும் படியுங்கள்:
Flashback: 'ரகுவரன் லக்கியான நடிகர் இல்லையாம்!'
Raghuvaran: A Star That Defied Time

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com