"லியோ தாஸ்மா" லியோ ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லியோ
லியோ
Updated on

டிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் தான் லியோ. ஏற்கனவே இருவரின் கூட்டணியிலும் வெளியான மாஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றதால் லியோ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

பல போராட்டங்கள், சர்ச்சைகளை தாண்டி லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் படம் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் படங்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையுடன், தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்த 3ஆவது படம் என்ற அடையாளத்தையும் லியோ பெற்றது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே சப்டைட்டிலுடன் கூடிய ஹெச்டி பிரிண்ட் பைரசியில் வெளியானது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com