ஹீரோ எண்ட்ரி கொடுத்து ரொமேன்சில் கலக்கும் லோகேஷ்... வைரலாகும் வீடியோ!

lokesh - shruti haasan
lokesh - shruti haasan
Updated on

லோகேஷ் கனகராஜ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இனிமேல் ஆல்பம்' பாடலின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குனராக லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களும் ஹிட்டடித்த நிலையில், தற்போது அவர் ஹீரோ அவதாரம் எடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைப்பில் தயாராகி வரும் இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தையும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

இதுதவிர தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள எஸ்.டி.ஆர் 48 படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரித்துள்ள மற்றொரு புராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் காதலர் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. அந்த புராஜெக்டில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூரில் தயாராகும் எல்ஐசி படம்... கசிந்த தகவல்!
lokesh - shruti haasan

25ஆம் தேதி இந்த படத்தின் பாடல் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் இனைந்து நடித்திருக்கும் ‘இனிமேல்’ ஆல்பத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இருவரும் ரொமான்சில் அசத்தியுள்ளனர். லோகேஷ் படத்தில் கூட இப்படி ஒரு சீனை பார்த்ததில்லை. லோகேஷ் இப்படி ஒரு நடிப்பில் ஈடுபட்டுள்ளது ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com