விமர்சனம்: L.S.S: Love Subscribe Share - படத்தை பார்க்கப் போறீங்களா... இதைப் படிச்சிட்டு போங்க!

L.S.S - Love Subscribe Share
L.S.S - Love Subscribe Share
Published on
ரேட்டிங்(2.5 / 5)

இந்த பிப்ரவரி மாதம் வந்தாலும் வந்தது, டைரக்டர்கள் எல்லாம் வரிசையா லவ் சப்ஜெக்ட் படமாக ரிலீஸ் பண்ண ஆரம்பசிட்டாங்க. காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த பிப்ரவரி மாதத்தில் வித் லவ், மைலாஞ்சி போன்ற காதல் கதையை மைய்யமாக கொண்ட படங்கள் வெளியாகின. இந்த வரிசையில் மஹாலக்ஷ்மி முருகன் இயக்கத்தில் L.S.S: Love Subscribe Share என்ற படம் வெளியாகி உள்ளது. ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

ஹீரோ ஆதவ் கிருஷ்ணாவும், ஹீரோயின் சிம்ரன் அத்வானியும் கல்லூரியில் காதலிக்கிறராகள். ஆதவ் கிருஷ்ணா பெற்றோர்களுக்கு சிம்ரன் அத்வானியை பிடித்து போகிறது. ஆனால் பெரும் பணக்காரரான சிம்ரன் அத்வானியின் அப்பாவிற்கு ஆதவ் கிருஷ்ணாவை பிடிக்கவில்லை.

தனது தந்தையை விட்டு பிரிந்து காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவ் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைக்க ஆதவை அழைத்து கொண்டு காசிக்கு செல்கிறார் சிம்ரன். சென்ற இடத்தில் காணாமல் போய் விடுகிறார். ஆதவ்தான் ஏதாவது செய்திருப்பான் என்ற எண்ணத்தில் போலீஸ் ஆதவை சிறையில் தள்ளுகிறது. சிம்ரன் அத்வானியின் அப்பாவும் காசிக்கு வந்து தன் மகளை தேடுகிறார். ஹீரோயினுக்கு என்னதான் ஆச்சு? என்று சொல்கிறது இந்த படம்.

படத்தின் முதல் பாதி நல்ல காதல் கதை உள்ள படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. சிம்ரன் அத்வானி - ஆதவ் கல்லூரி காதல் மிகவும் நாகரீகமாக படமாக்கப்பட்டுள்ளது. காதலுடன் சேர்த்து படிப்பின் முக்கியத்துவம், குடும்பத்தின் அன்பு என பல விஷயங்களை டைரக்டர் சொல்லி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஹீரோயின், ஹீரோவின் வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் பழகும் காட்சி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் படத்தின் முதல் பாதி வரை தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
திரை விமர்சனம்: ‘Couple Friendly’ - காதல் என்பது வெறும் ஈர்ப்பல்ல; ஒரு நம்பிக்கை..!
L.S.S - Love Subscribe Share

பாப் கான் சாப்பிட்டு விட்டு இரண்டாம் பாதியில் ரொமான்டிக் உணர்வுடன் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால், இரண்டாம் பாதி கடத்தல், சேசிங், சுமாரான ஆக்ஷன் என பல படத்தில் பார்த்த டெம்ப்லேட்டில் செல்கிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, முடிக்க தெரியாமல் முடித்திருக்கிறார் டைரக்டர். ஹீரோயின் அம்மா, ஹீரோவின் அப்பாவுடன் வரும் நண்பர் போன்ற கதாபாத்திரங்கள் சரியாக உருவாக்கப்படவில்லை.

ஹீரோயின் சிம்ரன் அத்வானி காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முயற்சி செய்தால் 1990 களின் சிம்ரன் போல் வரலாம். ஹீரோ ஆதவ் கிருஷ்ணாவிற்கு நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. (மாஸ் காட்டுவது தவிர்த்து நல்லா நடிக்க முயற்சி பண்ணுங்க தம்பி)

சாம் என்ற ஜாவர் சுந்தரேசன் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார். ஹீரோயின் அப்பாவாக நடிப்பவர் சாயலில் அஜித் போல் இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியும் சரியாக இருந்திருந்தால் இந்த L.S.S சூப்பரான காதல் எக்ஸ்பிரஸாக இருந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com