சமந்தாவின் அதிரடி அவதாரம்! 'Maa Inti Bangaaram' - முழு விமர்சனம்

குடும்பத் தலைவியாக வந்து மிரட்டும் சமந்தா; இது ரஜினியின் பாட்சா பாணி ஆக்ஷன் விருந்து!
Maa Inti Bangaaram
Maa Inti Bangaaram
Updated on
ரேட்டிங்(2.5 / 5)

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்சா (1995) படம் ரஜினி ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் படம். அந்தப் படத்தின் பார்முலாவில் கட்டா குஸ்தி (2022) படத்தின் திரைக்கதை அமைப்பில் சமந்தா 'விஜயசாந்தி' மாதிரி ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் தெலுங்கில் மா இண்ட்டே பங்காரம் (Maa Inti Bangaaram). தமிழ் அர்த்தம் எங்கள் வீட்டுத் தங்கம். தமிழ் டப்பிங் பட டைட்டில் எங்கள் தங்கம்.

ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் காலகட்டம் 1990. ஒரு பாரம்பரியம் மிக்க கூட்டுக் குடும்பத்தில் மருமகளாகப் போகும் நாயகிக்குக் குடும்பத்தில் போதிய வரவேற்பு இல்லை. காரணம் நாயகியின் காதல் திருமணம். நாயகிக்கும், அந்தக் குடும்பத்துக்கும் எப்படி செட் ஆகிறது என்பதைக் காமெடியாக முதல் பாதியில் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகிக்கு ஒரு முன் கதை இருக்கிறது. அது யாருக்கும் தெரியாது. முன் விரோத வில்லன்களால் நாயகியின் இப்போதைய குடும்பத்துக்கு ஆபத்து நேர இருக்கும்போது ஆபத்பாந்தவியாய் நாயகி ஆக்சன் அவதாரத்தில் இறங்கிக் கலக்குவது தான் மீதித் திரைக்கதை.

நாயகியாக சமந்தா குடும்பத்துப் பெண்ணாக பாந்தமாக வரும்போதும் சரி, ரிவால்வர் ரீட்டாவாக டிரான்ஸ்பர்மேசன் ஆகி ஆக்சனில் கலக்கும்போதும் சரி மனதில் பதிகிறார். சமந்தாவின் உச்சபட்ச அழகு கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வந்த 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் வெளிப்பட்டது. மெருகேற்றிய தங்கம் போல் அதில் ஜொலிப்பார். ஆனால் இந்தப் படத்தில் அந்த அளவு அழகு இல்லை என்றாலும் ஜிம் போய் எக்சசைஸ் எல்லாம் செய்து பாடியை பிட் (Fit) ஆக வைத்திருக்கிறார், பாராட்டலாம்.

வில்லனாக குல்சன் தேவய்யா மிரட்டியிருக்கிறார்.

நாயகியின் மாமனார், மாமியார் ஆக  திருடா திருடா புகழ் ஆனந்த், கவுதமி நடித்திருக்கிறார்கள். பாராட்டத்தக்க குணச்சித்திர நடிப்பு. இவர்கள் போக திகந்த் மன்சாலே, மஞ்சுசா போன்றோர் நடிப்பும் அருமை.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம். பிஜிஎம் தெறிக்கிறது.

ஆர்ட் டைரக்சன் பிரமாதம். 1990 கால கட்டத்தில் வரும் கார், ரேடியோ என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் டிசைனிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி.

சபாஷ் டைரக்டர்

  • முதல் பாதியில் நாயகியின் அப்பாவித்தனமும், இண்ட்டர்வெல் பிளாக்கில் கோயிலில் சாதா நடை நடந்து வருபவர் திடீர் என ட்ரான்ஸ்பர்மேசன் ஆகி கெத்தாக நடந்து வரும் சீன் அதகளம். தியேட்டரில் விசில் பறந்தது. பாட்சாவில் ரஜினி என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற மாஸ் சீனுக்கு நிகரான சீன் இது.

  • இண்ட்டர்வெல் பிளாக் சீனில் நாயகியும், வில்லனும் சந்திக்கும் சீனில் பத்ரகாளி அம்மன் சிலையை சிம்பாலிக்காக மேட்ச் பண்ணிக்காட்டிய விதம் கலக்கல் ரகம்.

  • முதல் பாதியில் கதையோடு ஒட்டி வரும் காமெடிக் காட்சிகள், வசனங்கள் அருமை.

  • பஸ்சில் நடக்கும் சண்டைக்காட்சி, வீட்டில் துப்பாக்கியை செட் பண்ணி லோடு பண்ணும் காட்சி செம.

  • நாயகியின் ஆக்சன் சீக்வென்சுக்கு மட்டும் வரும் துள்ளலான பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் அக்மார்க் முத்திரை.

  • நாயகியின் தோழி கேரக்டர், சமையல் காமெடி, கோயிலில் வரும் சீக்வன்ஸ்.

இதையும் படியுங்கள்:
நூறு சாமி விமர்சனம்: அம்மா ஒரு மனுஷி! சமூகத்தின் முகத்திரையைக் கிழித்தாரா சசி?
Maa Inti Bangaaram

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • கொடூரமான வில்லன் ஒருவன் இருக்கிறான், எல்லா அட்டூழியங்களும் செய்கிறான், ஆனால் போலீஸ் என்ன செய்கிறது? என்ன ஆக்சன் எடுத்தது? பதில் இல்லை.

  • எ லாங்க் கிஸ் குட் நைட் (1996) படத்தின் உல்டா வெர்சன் தான் இது. அதில் நாயகி கத்தியைக் கையாள்வதில் நிபுணி, இதில் துப்பாக்கி ஸ்பெஷலிஸ்ட். அவ்ளோ தான் வித்தியாசம். ஆனால் டைட்டிலில் அதற்கான கிரெடிட் தரப்படவில்லை.

  • இண்ட்டர்வெல் பிளாக் சீன் உட்பட சில காட்சிகள் ரஜினியின் பாட்சா, கட்டா குஸ்தி, பிளாஸ்ட் ஆகிய படங்களை நினைவுபடுத்துகிறது.

  • வில்லனின் கேரக்டர் டிசைன் மிகவும் பலவீனமாக எழுதப்பட்டிருக்கிறது.

  • முதல் பாதியில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகள் அலுப்பைத் தருகின்றன.

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - ஹீரோயின் ஓரியண்ட்டட் ஆக்சன் மூவி பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வாரண்ட் விமர்சனம்: போலீஸ் ஸ்டேஷன் உள்ளே நடக்கும் அதிர்ச்சி ரகசியங்கள் என்ன?
Maa Inti Bangaaram

சில சுவராஸ்யத்தகவல்கள்

  • இந்தப்படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன எ லாங்க் கிஸ் குட்நைட் (1996) படத்தில் நாயகியின் கேரக்டர் பெயரும் சமந்தாதான். இதில் சமந்தாவே நாயகி.

  • எ லாங்க் கிஸ் குட்நைட் படத்தின் நாயகி கீனா டேவிஸ், படத்தின் இயக்குநர் ரென்னி ஹார்லின் இருவரும் கணவன், மனைவி. இந்தத் தம்பதி படம் ரிலீஸ் ஆகி 5 வருடங்களில் பிரிந்து விட்டார்கள். அதே போல் மா இண்ட்டி பங்காரம் (எங்கள் தங்கம்) நாயகி சமந்தாவும், தயாரிப்பாளர் நீல் மோர் இருவரும் தம்பதிகள்

  • தெலுங்கு, தமிழ் இரு வெர்ஷனிலும் சமந்தா. சொந்தக் குரலில் டப்பிங் பேசி இருக்கிறார்.

  • வைஜெயந்தி ஐபிஎஸ், பூ ஒன்று புயலாகிறது வரிசையில் தெலுங்கு, தமிழ் இரண்டிலும் ஹிட் ஆகும் ஹீரோயின் ஓரியண்ட்டட் ஆக்சன் மூவி இது என டிஸ்ட்ரிபியூட்டர்கள் சொல்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com