பிரபல காமெடி நடிகரான மதன் பாபு ஒரு பாக்ஸர் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அவரே இதுகுறித்து பேசியதைப் பார்ப்போம்.
பல தமிழ் படங்களில் நடித்த புகழ்பெற்ற காமெடியன் மதன் பாபு. இவரின் காமெடியைவிட சிரிப்பிற்கே அதிக ரசிகர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்தவர் இவர். நடிகர் மதன் பாபு முதலில் இசையமைப்பாளராக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அதற்கு பிறகு "நீங்கள் கேட்டவை" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இவர் அசத்தப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தவர். இவர் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், அதில் தன்னுடைய பங்கை சிறப்பாக ஆற்றி மக்கள் மனதை கவருபவர். இதற்கு ஒரு சாட்சிதான் ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம்.
இப்படியான நிலையில் இவர் இசையமைப்பாளர் நடிகர் மட்டுமின்றி ஒரு சர்பட்டா பரம்பரை பாக்ஸரும் கூட என்று கூறினால் நம்பமுடிகிறதா?
ஆம்! சர்பட்டா பரம்பரை கோச் அனைவரையும் அவருக்கும் நன்றாகத் தெரியுமாம். தினமும் காலையில் டிபன் சாப்பிடுவது என்பதே கிடையாது. ஒரு கிலோ தக்காளி, ஒரு கிலோ கேரட் 28 பச்சை முட்டை சாப்பிடுவாராம். தினமும் 6 கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொள்வாராம். கூட இருப்பவர்களுடன் போட்டி போட்டு உடற்பயிற்சி செய்வாராம். இதுபற்றி ஒருமுறை பா. ரஞ்சித்திடமே கூறினாராம். அப்போது அவர் இது தெரிந்தால், நான் உங்களை ஒரு கேரக்டரில் நடிக்க வைத்திருப்பேனே என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.
சர்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னரே, அப்படி ஒரு பாக்ஸிங் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிய வந்தது. ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த அந்த படம்தான், பா. ரஞ்சித்தின் சினிமா கெரியர் உச்சத்திற்கு போகவும் உதவியது.
இப்படிபட்ட ஒரு பாக்ஸரான மதன் பாபு, எப்படி அடுத்து இசையமைப்பாளராகி நடிகராகி…. எல்லாம் ஒரு பெரிய கதைதான் போல.