

க்ரேசி ஸ்டுப்பிட் லவ் ஹாலிவுட் கதையும் மணிரத்னம் படம் களமும்!
சமீபத்தில் மணிரத்னம் படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பைக் கிளப்பின. மீசை இல்லாத விஜய் சேதுபதியின் 'யங் லுக்' இது நிச்சயம் ஒரு காதல் கதை தான் என்று யூகிக்க வைத்தது.
காற்று வெளியிடை படத்தில் கார்த்தி இதே போல் மீசை இல்லாத கெட்டப்பில் தான் நடித்தார். ஆனால், படம் வெற்றி பெறவில்லை என மீம்ஸ் ஓடியது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன், மாதவன் நடித்த அலைபாயுதே, ஆகிய படங்களிலும் நாயகனுக்கு மீசை இல்லை. ஆனாலும் அந்தப் படங்கள் ஓடவில்லையா? எனவே மணிரத்னம் இயக்கும் படத்தில் நாயகனுக்கு மீசை இல்லை என்பதால் அந்தப்படம் ஹிட் ஆகாது என்ற வாதத்தில் வலிமை இல்லை.
மணிரத்னம் இதுவரை 29 படங்களை இயக்கி இருக்கிறார். இப்போது இயக்கும் புதிய படம் அவரது 30வது படம். இன்னமும் டைட்டில் வைக்கப்படவில்லை.
புதிய படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று விசாரித்ததில் 2011ம் ஆண்டு வெளியான 'கிரேசி ஸ்டுப்பிட் லவ்' என்ற ஹாலிவுட் படத்தின் அபிஷியல் ரீமேக் (official remake) அல்லது அன் அபிசியல் ரீமேக் (unofficial remake) அல்லது பட்டி டிங்கரிங்க் அட்லி (tinkering) வெர்சன் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படங்களில் பெரும்பாலும். உல்டா கதைகள்தான். திரைக்கதை , ட்ரீட்மெண்ட் , மேக்கிங்கில் தனி பாணி வைத்திருந்தாலும் புதுக்கதையாக இருக்காது.
சரி. க்ரேசி ஸ்டுப்பிட் லவ் படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
50 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 145 மில்லியன் டாலர் வசூலித்த படம். கிளாமர் குயின்களான எம்மா ஸ்டோன், ஜூலியனே மூர் ஆகியோர் நடித்த படம். நாயகன் 45 வயதான நபர். மனைவி, 13 வயது மகன் கொண்ட நல்ல குடும்பம்.
ஓப்பனிங்க் ஷாட்டிலேயே நாயகி நாயகனிடம், 'உன்னிடம் அட்ராக்ட்டிவான விஷயங்கள் எதுவும் இல்லை. ரொம்ப போர் கேரக்டர். உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு டைவர்ஸ் வேண்டும். எனக்கு வேறு ஒருவருடன் காதல் இருக்கிறது. என்னுடன் பணி புரியும் நபரைக் காதலிக்கிறேன்' என்கிறாள்.
நாயகனுக்குக் கடும் அதிர்ச்சி. அப்செட் ஆகி வெளியே கிளம்புகிறான். பெண்களை வசீகரிப்பது எப்படி? என்பதை நாயகனின் நண்பன் ட்யூஷன் எடுக்கிறான். ஒரு பாரில் சில பெண்களை சந்தித்து அவர்களை வசீகரிக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். அவளுடன் நாயகன் நெருக்கமாக இருக்கிறான். இப்போது நாயகனுக்குத் தன்னம்பிக்கை வந்து விடுகிறது.
எப்படியும் மனைவியைத் தன்வசப்படுத்தி விடலாம். அவள் மனதை மாற்றி விடலாம் என்று நம்புகிறார். நாயகனின் வீட்டில் ஜெசிகா என்ற 18 வயதுப் பெண் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். நாயகனின் நண்பனின் மகள் காலேஜ் படித்துக்கொண்டே பார்ட் டைமாக இங்கே வேலை செய்கிறாள். நாயகனின் 13 வயது மகனுக்கு ஜெசிகா மீது ஒரு தலைக்காதல். ஆனால் ஜெசிகாவுக்குத் தன் அப்பா வயசுள்ள அப்பாவின் நண்பரான நாயகன் மீது காதல்.
நாயகனின் மகனிடம் ஜெசிகா, 'உன் அப்பாவைத்தான் லவ் பண்றேன்' என ஓப்பனாக சொல்லாமல் பூசி மெழுகுகிறாள். 'நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். அதுவுமில்லாமல் நான் வேறு ஒருவரை விரும்புகிறேன். என்னை மறந்து விடு' என்கிறாள்.
ஜெசிகாவின் அப்பா உண்மை புரியாமல் நாயகனைத் தப்பாக நினைக்கிறான். தன் மகள் மனதை திட்டமிட்டு மயக்கி விட்டான் என்று நினைக்கிறான். ஆனால் நிஜத்தில் நாயகனுக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது.
ஒரு கட்டத்தில் நாயகனின் மகனின் உண்மையான அன்பை உணர்ந்து ஜெசிகா அவனிடம் காதலுக்கு ஓகே சொல்கிறாள். நாயகியும் நாயகனின் அன்பை உணர்ந்து, 'விவாகரத்து வேண்டாம்; நாம் ஒன்றாக இருப்போம்' என்கிறாள். சுபம்.
இது தான் ஹாலிவுட் படத்தின் கதை. இதைத் தமிழுக்கு ஏற்ற மாதிரி பட்டி டிங்கரிங் பண்ணி இருக்கலாம்.
இணையத்தில் வெளி வந்த விஜய் சேதுபதியின் மீசை இல்லாப் புகைப்படங்கள், கதைப்படி நாயகன் வசீகரம் இல்லாதவன் என்று நாயகி சொன்னபின் நாயகனின் தோழி நாயகனை பியூட்டி பார்லர் அழைத்துச்சென்று அவனை அழகாக மாற்றுவதுதான்.
இந்த விவகாரமான கதை தமிழுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் மணிரத்னம் அடுத்த பரபரப்புக்குத்தயார் ஆகி விட்டார்.
கே பாலச்சந்தர் படத்தில் தான் ( அபூர்வ ராகங்கள்) இப்படி அப்பா வயது ஆள் நாயகன் - மகள் வயது பெண் நாயகி என்று வரும் . கத்தி மேல் நடப்பது மாதிரி ஜாக்கிரதையாக அவர் கையாண்டு வெற்றி பெற்றார். மணிரத்னம் என்ன செய்யப்போகிறார் தெரியவில்லை.
நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். க்ரேசி ஸ்டுப்பிட் லவ் 2011 படம் நெட் பிளிக்சில், அமேசான் பிரைம் (ரெண்ட்டல்) காணக் கிடைக்கிறது. மணிரத்னம் ரசிகர்கள் பார்த்து வைத்துக் கொள்ளவும்.
இப்படத்தின் முழுமையான கதைக்களம் மற்றும் ஹாலிவுட் தொடர்பு குறித்த பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்துகொள்வதன் மூலம், வரவிருக்கும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சினிமா ரகசியங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திரையரங்கு அனுபவத்தைப் பெறுவீர்கள்.