

அனைத்து கிரகங்களுமே ஒரே நேர்கோட்டில் சந்திக்குமா? இதற்கு சாத்தியம் இருக்கிறதா? இருக்கிறது என்று சொல்கிறது சுந்தர் சி இயக்கத்தில் வந்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம். சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா ஊர்வசி நடித்து வெளிவந்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் கதை என்ன என்று பார்க்கலாம்.
போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கிறார் நயன்தாரா. இவருக்கு கனவில் மைலாஞ்சி என்ற ஒரு ஊரின் பெயர் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. தூங்கும் போது திடீரென்று குதிரைகள் பறப்பது போலவும், போர் வீரர்கள் ஓடுவது போலவும் தோன்றுகிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பில்லி சூனியம் செய்யும் கே. ஜி. எப் கருடா ராம் நயன்தாராவை எதிர்க்கிறார். இந்த எதிர்ப்பில் ராமின் மகனை கொலை செய்து விடுகிறார் நயன்தாரா. இதனால் நயன்தாராவை கொலை செய்ய பழிக்கு பழி வாங்க துரத்துகிறார் ராம்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இருக்கும் மயிலாஞ்சி ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி செல்கிறார் நயன்தாரா. அந்த ஊரில் இவருக்கு பல்வேறு அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அனைத்து கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நேரத்தில் நடந்த ஒரு விஷயத்திற்கும் தற்போது நடக்கும் விஷயத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அது தான் சம்பந்தப்பட்டது என்று உணருகிறார் நயன்தாரா. அது என்ன? அது எந்த சம்பந்தமான பிரச்சினை? என்று சொல்கிறது இந்த படம்.
வெளிப்படையாக சொல்லிவிட்டால் இந்த படத்தில் லாஜிக் நாம் பார்க்க முடியாது. அரண்மனை படத்தில் பேய்கள் என்றால் இங்கே தீய சக்தி. இங்கேயும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அம்மன் பாடல் உண்டு. பேய் படமான அரண்மனை படங்களிலேயே அம்மன் பாடல் இருக்கிறது என்றால் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் பாடல் இருக்காதா என்ன? கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அம்மன் பாடல் இருக்கிறது.
சமீப கால சுந்தர் சி படங்களில் எல்லாம் குஷ்பூ லேசாக தலைகாட்டி விடுவார். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். குஷ்பு மட்டும் நடித்தால் தன் மனைவியை மட்டும் நடிக்க வைத்திருக்கிறார் என்று யாராவது சொல்லி விடுவார்கள் என்று எண்ணி சினேகாவையும் உடனே சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர் சி. படம் தொடங்கியது முதல் கொஞ்சம் பரபரப்பாக தான் செல்கிறது. பெரிய அளவில் எங்கேயும் தொய்வில்லை இந்த படத்தில் யோகி பாபு இருக்கிறார். இருந்தாலும் பெரிய அளவில் நகைச்சுவை செய்யவில்லை.
இதற்கு பதிலாக இந்த நகைச்சுவை அனைத்தையும் ஏற்று நம்மை சிரிக்க வைப்பது நயன்தாராவின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி. ஊர்வசியின் சின்ன சின்ன முகபாவங்கள் கூட நம்மை சிரிக்க வைக்கிறது. படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் வழக்கமான டெம்ப்லேட்டில் தான் செல்கிறது. இருந்தாலும் அனிமேஷன், வி எப் எக்ஸ் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி இருப்பதால் குழந்தைகள் தியேட்டரில் கைதட்டுவதை பார்க்க முடிந்தது.
அம்மன் கேரக்டரிலும், கான்ஸ்டபிள் கேரக்டரிலும் நயன்தாரா சிறப்பாக நடித்து இருக்கிறார். இனி நயன்தாராவை அதிகமான அம்மன் படங்களில் எதிர்பார்க்கலாம். வில்லனாக சுனில், கருடா ராம் என்ற இருவர் இருந்தாலும் கருடா ராம் தான் நம்மை அதிகளவு பயமுறுத்துகிறார்.
ரெஜினா கசன்ட்ரா ஒரு நெகட்டிவ் ரோலில் அசால்ட்டாக அனைவரையும் விட நடிப்பில் நம்மை அசத்தி விடுகிறார். இவரின் கேரக்டரை முழுவதாக இங்கே சொல்ல முடியாது. சொன்னால் படத்தில் இருக்கிற சஸ்பென்ஸ் குறைய வாய்ப்புள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளர். ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையில் பெரிய அளவில் வித்தியாசங்களை காட்டவில்லை என்றாலும் படத்தின் கிளைமாக்ஸில் வரும் அம்மன் பாடல்களில் ஓரளவு வித்தியாசத்தை காட்ட முயற்சித்து உள்ளார்.
சரி இந்த தீபாவளிக்கு மூக்குத்தி அம்மனை பார்க்கலாமா எப்படி?
ஒரு சரியான பொழுது போக்கு படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றால் மூக்குத்தி அம்மன் 2 சரியான படமாக இருக்கும். செண்டிமெண்ட் ரசிகர்களுக்கு செண்டிமெண்ட் காட்சி, பக்தி இருப்பவர்களுக்கு அம்மன் காட்சி, குழந்தைகளுக்கு இப்படி அனைத்தையும் கலந்து தந்துள்ளார் சுந்தர் சி. கண்டிப்பாக மூக்குத்தி அம்மன் 2 தீபாவளிக்கு அனைத்து சென்டர் மக்களுக்கும் பிடித்த ஒரு படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வாசகர்கள் படத்தின் கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிய முழுமையான சினிமா அனுபவத் தகவலைப் பெறுவார்கள்.