இந்த வாரம் தியேட்டரில் எந்த படத்தை பார்க்கலாம்? "29" முதல் விஜய்யின் "மெர்சல்" வரை - இதோ லிஸ்ட்!

theatre
theatre
Updated on

இயக்குநர் இந்தப்படத்தைப் பற்றி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "29 வயதான எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு குழப்பமான மனநிலை இருக்கும். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை பிறக்கும் பருவம் இது. என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இந்தக் கதையை அமைத்திருக்கிறேன்" என்கிறார்.

சீன் ரோல்டன் இசையில் 6 பாடல்கள். அந்த ஆறில் 'பூ' பாடல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'காதலன்' படத்தில் வரும் 'காதலிக்கும் பெண்ணின் கை' பாடல் போலவே (மெலோடியாக) இருக்கிறது. ட்ரெய்லரைப் பார்த்தபோது 'எங்கேஜிங்' ஆன ரொமாண்டிக் டிராமா போல் தெரிகிறது.

ரசித்த வசனங்கள்:

  • "நான் யாரு? என்னோட அடையாளம் என்ன? இந்த தேவதையோட ஆளு என்பதுதான் இப்போதைக்கு என்னோட அடையாளம்."

  • "பெரியவனா ஆகுறதுக்கு முன்னாடி நீ என்னவா ஆகணும்னு ஆசைப்பட்ட?" - "பெரியவனா ஆகணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன்."

  • "அவன் ஒண்ணும் நமக்காக மாறலை; அவன் நேசித்த பொண்ணுக்காக மாறிருக்கான்."

  • "காதல் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா பிச்சுத் திங்குது."

  • "லவ் பண்ணும்போது கெமிஸ்ட்ரி நல்லா இருந்தாப் போதும், ஆனா அதுக்கு அப்புறம் மேட்ச் வேணும்."

  • "அவனுக்குன்னு ஒரு அடையாளமே இல்லாம அழிச்சுக் காமிக்கிறேன்."

நாயகன் விது முக சாயல் ,உடல் மொழி அனைத்தும் நடிகர் தனுஷை நினைவுபடுத்துகிறது.

2. மார்ட்டல் காம்பாட் பாகம் 2 (ஆங்கிலம் / தமிழ்) :

80 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 2021ல் வெளியான முதல் பாகம் போலவே ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் வெளியாகிறது.இது ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் ஃபேண்டஸி திரைப்படம்.

ரசித்த வசனங்கள்:

  1. "ஒரு ஹீரோ எப்படி உருவாகிறான் தெரியுமா? விதியினால் இல்லை; சூழ்நிலையால்."

  2. "பிறக்கும்போது யாரும் ஹீரோ இல்லை."

  3. ஒரு உயரத்தைத்தேடிப்போகும்போது தான் நமக்குள்ளேயும் ஒரு ஹீரோ இருந்திருக்கிறான் என நமக்கே தெரிய வரும்."

  4. "நம்ம தலையெழுத்தை மாற்றி அமைக்க போவது நம்ம படைபலம் மட்டும் அல்ல."

  5. "இந்த உலகத்தோட தலையெழுத்தை தீர்மானிக்க போகும் போர் இது."

  6. "பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன், இல்லைன்னா மோதிடுவேன்."

  7. "கவலைப்படாதே, உன்னால என்னை ஒண்ணும் செய்ய முடியாது."

மாயாஜாலம் மற்றும் மந்திரம் நிறைந்த ஆக்ஷன் படம் இது.

3. Day 11 (தமிழ்) :

இது ஒரு லோ பட்ஜெட் படம்.அட்வென்ச்சர் பேண்ட்டசி திரில்லர் வகை. ட்ரெய்லரை பார்க்கும் போது நான்கு ஆண்கள் ,ஒரு பெண். ஐவரும் ஒரு பேய் பங்களாவில் மாட்டிக்கொள்வது தான் கதை போல் தெரிகிறது.

நடிகர் ,நடிகையர் அனைவரும் புதுமுகங்கள்.ஆதர்ஷ்,அபிமன்யு,ரவிச்சந்திரன்,ஸ்ரீத்திகா,செல்வா

ரசித்த வசனம் :

"ஒரு டாக்டரா பிறப்பு, இறப்பு எல்லாத்தையும் பார்க்கிறோம். ஆனா, பிறப்பின்போது எல்லையில்லாத மகிழ்ச்சி கிடைக்குது. இறப்பின்போது சோகம் தான் மிச்சம் நிக்குது; அதை மறக்கப் பல நாட்களாகுது."

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம்: ஸ்ரீத்திகா (பெண் இயக்குநர்).

4. கிருஷ்ண அவதாரம் (ஹிந்தி / தமிழ்)

'கிருஷ்ண அவதாரம் பாகம் 1: இதயம்' என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பு இது. இது ஒரு ஆன்மீகப் படம். துவாரகையிலிருந்து குருக்ஷேத்திரம் வரையிலான கிருஷ்ண பகவானின் பயணம் குறித்த கதை இது.

அதுமட்டுமில்லாமல் பாமா, ருக்மணி, ராதா ஆகியோருடனான கிருஷ்ணரின் உறவை பற்றி சொல்லும் படமும் கூட. ஹர்திக் கஜ்ஜார் இயக்கத்தில் சித்தார்த் குப்தா (கிருஷ்ணராக), சம்ஸ்க்ருதி ஜயானா, சுஷ்மிதா பட், நிவாஷினி கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ட்ரெய்லரைப் பார்க்கும்போது பிரம்மாண்டமான தயாரிப்பாகத் தோன்றுகிறது. ஒளிப்பதிவு மற்றும் லொகேஷன்கள் அருமை. ட்ரெய்லரில் ஹிந்தி பதிப்பின் எடிட்டிங் (Cut) பிரமாதமாகவும், தமிழ் பதிப்பு சுமாராகவும் இருக்கிறது. 7/5/2026 முதல் ரிலீஸ்.

5. மெர்சல் (மறுவெளியீடு/தகவல்)

2017ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த படம் இது. 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 250 கோடி வசூல் செய்த படம். விஜய் இதில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவான இந்த படம், கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் (Unofficial Remake) போன்றது. காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஜோடிகள். எஸ்.ஜே.சூர்யா வில்லன். வடிவேலு, கோவை சரளா காமெடிக்கு; யோகி பாபு, காளி வெங்கட் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

இசை: ஏ.ஆர். ரஹ்மான். 'ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் குமுறுகிறார்கள்..! - விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட தம்பி ராமையா..!
theatre
logo
Kalki Online
kalkionline.com