இந்த வாரம் ரிலீஸாகும் 3 படங்கள்!ஜி.வி. பிரகாஷின் 'ஹேப்பி ராஜ்' முதல் ஹாலிவுட் 'ஹெல் மேரி' வரை..!!

Movie theatre
Movie theatre
Published on

இந்த வாரம் நேரடி தமிழ்ப்படங்கள் இரண்டும் ,ஒரு ஹாலிவுட் படம் தமிழ் டப்பிங்கில் ஆக மொத்தம் 3 படங்கள் வெளியாகின்றன.(மார்ச் 27 வெள்ளிக்கிழமை.)

1. ஹேப்பி ராஜ் (Happy Raj)

போன வாரம் தான் ஜி.வி.பிரகாஷ் இசையில் யூத் வெளிவந்து சக்கை போடு போட்டது.இந்த வாரம் அவர் நாயகனாக நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' வெளியாகிறது.

ஜிவி பிரகாஷ்,ஸ்ரீ கவுரிப்ரியா அப்பாஸ் ,ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிக்க மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் வெளி வர இருக்கும் படம் தான் ஹேப்பி ராஜ்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் கட் போன வாரம் ரிலீஸ் ஆனது.அதிலிருந்து இந்தப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று நான் யூகித்தது....

கதைச் சுருக்கம்: நாயகனின் அப்பா உருவத்தில் குள்ளமாக இருப்பதால், கிராமத்தானாக இருப்பதால் நாயகனுக்கு உள்ளூர் பெண்கள் யாரும் சிக்கவில்லை.அப்பாவின் உருவத்தை வைத்தே மகனைக்கிண்டல் செய்கின்றனர்.இதனால் நாயகன் உள்ளூரிலேயே இருந்தால் வேலைக்காகாது.வெளியூர் போய் பெண் தேடலாம் என்று நினைக்கிறார்.

நாயகன் வெளியூரில் வேலைக்குப்போகிறார்.அங்கே தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரான நாயகியுடன் காதல் கொள்கிறார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் அரங்கேறுகிறது. நாயகியைப்பெண் பார்க்க நாயகன் தன் பெற்றோருடன் வரும்போது நாயகியின் தந்தை நாயகனின் பெற்றோரை அவமதிக்கிறார். இந்தச் சிக்கல்களைத் தாண்டி காதல் கைகூடியதா என்பதே படத்தின் கதை.

நாயகன் ஆக ஜிவி பிரகாஷ் குமார் நடிக்க நாயகி ஆக ஸ்ரீ கவுரிப்ரியா நடிக்கிறார்.நாயகனின் அப்பாவாக ஜார்ஜ் மரியம்,நாயகியின் அப்பாவாக அப்பாஸ் நடித்திருக்கிறார்.நீண்ட இடைவெளிக்குப்பின் அப்பாசை நரைத்த தாடி கெட்டப்பில் பார்க்க கே பாக்யராஜின் கெட்டப் நினைவு வருகிறது.

ஜி வி பிரகாஷ் துள்ளலான நடிப்பு படம் முழுக்க (ட்ரெய்லர் கட் முழுக்க) தெரிகிறது.கீதா கைலாசம் செண்ட்டிமெண்ட் சீனில் பின்னி இருப்பார் போலத்தெரிகிறது.மதுரை முத்து காமெடிக்கு.ஜஸ்டின் பிரபாகரன் தான் இசை.

இது ஒரு ரொமாண்டிக் காமெடி டிராமா.

2. நீ ஃபார் எவர் (Nee For Ever)

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் ட்ரெய்லர் கட் பார்த்து நான் யூகித்த கதை.

நாயகி அறிமுக இயக்குநர், ஒரு வித்தியாசமான காதல் திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.கதைக்காக அவருக்கு ஒரு 'பொய்யான காதலன்' தேவைப்படுகிறான்.நாயகன் காதலித்து மணக்க நினைப்பவன்.டேட்டிங்க் ஆப் மூலம் நாயகியை சந்திக்கிறான்,பழகுகிறான்.ஆனால் நாயகனுக்கு நாயகியின் எண்ணம் தெரியாது.கதை வசனம் எழுத மட்டும் தான் நாயகி பழகுகிறாள் என்பது நாயகனுக்குத்தெரியாது.இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை.நாகரீக உலகில் டேட்டிங்க் ஆப் மோசடிகளை சொல்ல வரும் கதை போல் தெரிகிறது.

நவீன கால டேட்டிங் ஆப் பின்னணியில் நடக்கும் மாற்றங்களைச் சொல்லும் ரொமாண்டிக் டிராமா இது.

அறிமுக நாயகன் சுதர்சன் கோவிந்த் ,புதுமுக நாயகி அர்ச்சனா ரவி இருவரும் ஜோடி ஆக நடிக்க அசோக் குமார் கலைவாணி இயக்கி இருக்கிறார்.நாயகன் நல்ல உயரம், நாயகி நல்ல முகவெட்டு. காட்சிகளில் புதுமை தெரிகிறது.

ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி இருவரும் நாயகன் ,நாயகி தரப்பு அப்பா மாதிரி தெரிகிறது.

3. புராஜெக்ட் ஹெய்ல் மேரி (Project Hail Mary - Tamil Dubbed)

இது ஹாலிவுட் சயின்ஸ் பிக்சன் அட்வென்ச்சர் மூவி.தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது.200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே 148 மில்லியன் டாலர் வசூல் செய்து இன்னமும் வெளிநாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ரன்னிங்க் டைம் 156 நிமிடங்கள்.

நடிகர்கள்: ரையான் கோஸ்லிங், சாண்ட்ரா ஹூலர்.

இயக்கம்: ஃபில் லார்ட் & கிறிஸ்டோபர் மில்லர்.

கதைச் சுருக்கம்: நாயகன் ஒரு மிகப்பெரிய சயிண்ட்டிஸ்ட்.ஆனால் அவருக்கு பழைய நினைவுகள் எதுவும் இப்போது இல்லை.

பூமிக்கு ஒரு ஆபத்து வர இருக்கிறது.அதில் இருந்து தப்பிக்கும் யுக்தி நாயகனுக்கு மட்டும் தான் தெரியும் என ஒரு டீம் நினைக்கிறது.ஆனால் நாயகனுக்கு எதுவும் நினைவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக நாயகனுக்கு நினைவு திரும்ப ஆரம்பிக்க அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை

விண்வெளியிலும் ஆராய்ச்சி கூடத்திலும் நடக்கும் காட்சிகளுடன், நாயகனுக்கு மெல்ல மெல்ல நினைவுகள் திரும்புவதும், அதன்பின் நடக்கும் அதிரடிச் சம்பவங்களுமே இந்த சயின்ஸ் பிக்ஷன் அட்வென்ச்சர் படத்தின் கதை.

இதையும் படியுங்கள்:
பிரபல பாலிவுட் படத்தை பார்த்து மிரளும் பாகிஸ்தான்! காரணம் இது தான்..!!
Movie theatre

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com