தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் வெளிவராமல் இருக்கும் சில படங்களைப் பார்ப்போம்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு யாரும் எதிர்பாரா விதமாக ஒரு படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஆம்! அது விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா படம்தான். 2012ம் ஆண்டே மத கஜ ராஜா படத்தை வெளியிடுவதற்காக சுந்தர் சி வேக வேகமாக படத்தை எடுத்து முடித்தார். ஆனால், சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் பாடிய ஒரு பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் திடீரென்று பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 12 வருடங்கள் கழித்து என்றால், ரசிகர்களின் ரசனை அனைத்தும் மாறியிருக்கும், இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று படக்குழு பயந்தது. ஆனால், எந்த காலத்து படம் என்றால் என்ன நல்ல படத்தை நாங்கள் வரவேற்போம் என்பதுபோல ரசிகர்கள் ஹிட்டாக்கிவிட்டனர்.
இப்படியான நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் படத்தை எடுத்து இன்னும் வெளிவராத படங்கள் குறித்து பார்ப்போம்.
இந்த லிஸ்ட்டில் கிட்டத்தட்ட 35 படங்கள் இருக்கின்றன. எந்த படம்? யார் இயக்குநர்? எந்த ஆண்டு இயக்கிய படம்? போன்றவற்றைப் பார்ப்போம்.
1. துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2023ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம்.
2. மோகன்தாஸ்: 2022ம் ஆண்டு விஷ்னு விஷால் நடிப்பில் முரளி கார்த்திக் இயக்கிய படம்.
3. கா: 2020ம் ஆண்டு ஆண்ட்ரியா நடிப்பில் நாஞ்சில் இயக்கத்தில் உருவான படம்.
4. வணங்காமுடி: 2020ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் அர்விந்த் சுவாமி, ரித்திகா சிங் நடித்த படம் இது.
5. ஆலம்பனா: 2021ம் ஆண்டு வைபவ் நடிப்பில் பாரி விஜய் இயக்கிய படம் இது.
6. பிசாசு 2: 2022ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த படம்.
7. மனுஷி: ஆண்ட்ரியா நடிப்பில், 2023ம் ஆண்டு கோபி நயினார் இயக்கிய படம்.
8. காதலை தேடி நித்யானந்தா, 4ஜி, அடங்காதே, ஆயிரம் ஜென்மங்கள், இடிமுழக்கம் போன்ற ஜிவி பிரகாஷின் படங்கள் இன்னும் ரிலீஸாகவில்லை.
9. பாரீஸ் பாரீஸ்: 2019ம் ஆண்டு காஜல் அகர்வால் நடிப்பில் அரவிந்த் இயக்கிய படம்.
10. அதோ அந்த பறவை போல: 2019ம் ஆண்டு வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம்
11. சுமோ: 2020ம் ஆண்டு ஹோமிசின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த் நடித்த படம் `சுமோ’.
12. வணங்காமுடி: 2020ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் அர்விந்த் சுவாமி, ரித்திகா சிங் நடித்த படம்.
13. காக்கி: விஜய் ஆண்டனி நடிப்பில் 2020ம் ஆண்டு செந்தில் குமார் இயக்கிய படம்.
14. யங், மங், சங்: 2019ம் ஆண்டு உருவான அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா, ஆர் ஜே பாலாஜி, லட்சுமி மேனன் நடித்த படம்.
15. பார்ட்டி: 2018ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், ஜெயராம், சத்யராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன் நடித்த படம்.
16. சதுரங்க வேட்டை 2: 2018ம் ஆண்டு ஹெச் வினோத் கதை எழுத, அரவிந்த் சுவாமி, த்ரிஷா நடிப்பில் நிர்மல் குமார் இயக்கி உருவானது.
17. நரகாசூரன்: 2018ம் ஆண்டு கார்த்திக் நரேன் இயக்கிய படம் `நரகாசூரன்'. அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா, இந்திரஜித் எனப் பலரும் நடித்திருந்தனர்.
18. சந்தானத்தின் சர்வர் சுந்தரம் (2017), மன்னவன் வந்தானடி (2017), ஓடி ஓடி உழைக்கனும் (2018) ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை.
19. ஒத்தைக்கு ஒத்தை: 2018ம் ஆண்டு அதர்வா நடிப்பில் பர்னேஷ் இயக்கத்தில் உருவான படம்.
20. காதல் 2 கல்யாணம் : 2010ம் ஆண்டு மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, திவ்யா ஸ்பந்தனா நடித்த படம் `காதல் 2 கல்யாணம்'.
மேலும் ரெண்டாவது இடம் (2013), வா டீல் (2014), இடம் பொருள் ஏவல் (2014), அப்பாவின் மீசை (2015), ரா ரா ரா ராஜசேகர் (2015), யார் இவர்கள் (2018), சிப்பாய் (2016), கிரகணம் (2017), இறவாக்காலம் (2017), அலாவுதீனின் அற்புத கேமரா (2019), அக்னி சிறகுகள் (2020), டைட்டானிக் காதலும் கவுந்து போகும் (2018), ஏஞ்சல் (2019) போன்ற படங்கள் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை மத கஜ ராஜாக்கள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் பல படங்கள் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.