எந்தவித செல்போனாக இருந்தாலும் அதன் ஆரம்பக்கட்ட வேலை தொலைத்தொடர்பு. அந்தத் தொலைத்தொடர்புக்கு முக்கியமானது சிம் கார்டு. சந்தையில் பல செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் உள்ளன. தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து விஷயங்களும் நெட்வொர்க் நிறுவனங்களைப் பொறுத்தது. செல்போனுக்கும் சிம் கார்டுக்கும் தொடர்பில்லை. சிம் கார்டை நாம் எந்தவித செல்போனிலும் பயன்படுத்த முடியும். அந்த சிம் கார்டு தொடர்பான ஒரு விஷயத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீங்கள் எந்தவித சிம் கார்டு வைத்திருந்தாலும் அதன் மூலைப்பகுதியில் வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அது ஏன் என்று தெரியுமா? ஆரம்பத்தில் சிம் கார்டுகள் தயாரிக்கப்பட்டபோது இன்றைய சிம் கார்டுகளைப் போல் அதன் ஒரு முனை வெட்டப்படவில்லை. இதனால் மொபைலின் உள்ளே ஒரு குறிப்பிட்ட ஸ்லாட்டில் சிம்மை நிறுவுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
எந்தப் பக்கம் சிம் கார்டை பொருத்த வேண்டும் என்ற குழப்பம் உண்டானது. அப்போது அட்டகாசமான 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வாட்ஸ்அப் ஒவ்வொரு முறையும் மொபைல் ஸ்லாட்டில் சிம் கார்டு பின்னோக்கிச் செருகப்படும். அதனால் நெட்வொர்க் பிரச்னையும், அதை வெளியே எடுத்து வைப்பது கடினமாகவும் இருந்தது.
சிம் நிறுவுவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்தன. அதுதான சிம் கார்டின் ஒரு முனையை வெட்டுவது. செல்போன் நிறுவனங்களும் சிம் சிலாட்டை அதற்கேற்ப தயார் செய்தன. இதனால் நமக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாது வெட்டப்பட்ட பகுதி செட்டாகும்படியே நாம் சிம் கார்டை செல்போனில் சொருகுகிறோம்.
தொழில்நுட்பப் பாதுகாப்பு: மற்றொரு முக்கியக் காரணம் தொழில்நுட்பப் பாதுகாப்பு. இந்த வெட்டு சிம் கார்டு சரியான ஸ்லாட்டில் பொருந்துவதை உறுதி செய்கிறது. நீங்கள் சிம் கார்டை தலைகீழாக அல்லது தவறான வழியில் செருக முயற்சித்தால், அது ஸ்லாட்டுக்குள் செல்லாது. இந்த வடிவமைப்பு நெட்வொர்க், ஸ்மார்ட்போன் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
சர்வதேச தரநிலைகள்: சர்வதேச தர நிலைகள் (ISO) சிம் கார்டுகளின் அளவு மற்றும் வடிவமைப்பை அமைக்கிறது. அனைத்து வகையான மொபைல் போன்கள் மற்றும் சாதனங்களுடன் சிம் கார்டுகள் இணக்கமாக இருப்பதை இந்த தர நிலைகள் உறுதி செய்கின்றன. இப்படி சைசாக வெட்டுவதும் இந்த தர நிலைகளின் ஒரு பகுதியாகும். எனவே, எந்தவித போனிலும் சிம்மை எளிதாகப் பயன்படுத்தலாம்.
சிம் கார்டு அமைப்பில் மாற்றம்: அப்படி கட் செய்ய ஆரம்பித்த பிறகு சிம் கார்டுகளின் வடிவமைப்பில் மெல்ல மெல்ல சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக, சிம்மின் அளவு பெரியதாக இருந்தது, ஆனால், நிறுவனங்கள் இப்போது அதை மிகவும் சிறியதாக மாற்றியுள்ளன.
ஏனெனில் இப்போது வரும் மொபைல்களில் சிறிய சிம் மட்டுமே இருக்குமாறு ஸ்லாட் செய்யப்பட்டுள்ளது. சிம் கார்டு சைஸ்களில் எந்த மாற்றம் வந்தாலும் மூலையில் கட் என்பது சிம் கார்டுகளில் இருக்கத்தான் செய்கின்றன.