நான் நடிக்கவே வேண்டாம் என்றிருந்தேன்… ஆனால் அவர்தான் என்னை நடிக்கத் தூண்டினார் – கஜோல்!

Kajol With Sharukh Khan
Kajol With Sharukh Khan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பாலிவுட் நடிகை கஜோல் தனது சினிமா பயணத்தை இளம் வயதிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணியதை குறித்தும், அந்த எண்ணத்தை மாற்றிய நடிகர் குறித்தும் பேசியிருக்கிறார்.

பாலிவுட் முன்னணி நடிகை கஜோல் Bekhudi என்ற ஹிந்தி படத்தின்மூலம் 1992ம் ஆண்டு சினிமா துறையில் நுழைந்தார். அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக கஜோல் ஷாருக்கான் ஜோடி பெரியளவில் ஹிட்டானது. இந்த ஜோடிக்கே தனி ரசிகர்கள் இன்றுவரை உள்ளனர்.

‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோதா ஹை’, மற்றும் ‘கபி குஷி கபி கம்’ போன்ற கிளாசிக் படங்களில் நடித்து புகழ் பெற்றார். முதன் முதலில் தமிழில், மின்சார கனவு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழக மக்களுக்கு கஜோல் என்றால், வெண்ணிலவே வெண்ணிலவே பாடல்தான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு ஹிட் கொடுத்த படமாகும்.

பிறகு நீண்ட காலத்திற்கு பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். என்னத்தான் தமிழில் 2 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழக மக்களுக்கு பிடித்தமான நெருக்கமான ஹீரோயின் கஜோல் என்றே சொல்ல வேண்டும்.

அந்தவகையில் பேட்டி ஒன்றில் பேசிய கஜோல், “பல வருடங்களுக்கு முன்பு நான் ‘உதார் கி ஜிந்தகி’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அப்படம் எனது 3-வது படம் என நினைக்கிறேன். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். இப்படத்திற்கு பின்பு நடிப்பை விட்டு விலக நினைத்தேன். அப்போதுதான் ஷாருக்கான் என்னிடம் ‘எப்படி நடிக்க வேண்டும் என்று உனக்கு தெரியும் நீ கற்றுக்கொள்வாய்’ என்றார். இது என்னை தொடர்ந்து நடிக்கத் தூண்டியது’ “ என்று பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதியை காப்பாற்ற மீனா செய்த செயல்… உச்சகட்ட கோபத்தில் பாண்டியன்!
Kajol With Sharukh Khan

இது தற்போது வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் மற்றும் கஜோல் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல நண்பர்கள். இதனை பல பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் காண முடியும். அந்தவகையில் கஜோலின் அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சரியான பாதையை காண்பித்திருக்கும் ஷாருக்கான் நிஜமாகவே ஒரு நல்ல நண்பர்தான்.

logo
Kalki Online
kalkionline.com