அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்திற்கு பாடல் எழுதும்போது வாலி இயக்குநர் முருகதாஸை எப்படி கடுமையாக திட்டினார் என்பதுகுறித்து கவிஞர் வாலியே ஒருமுறை பேசியிருந்தார். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
நடிகர் அஜித் குமாரை தல என்றும், நடிகர் விஜயை தளபதி என்றும் சினிமா ரசிகர்கள் முன்னோர் காலத்தில் அழைத்து வந்தார்கள். தலையா தளபதியா என்ற மிகப்பெரிய போட்டியெல்லாம் நடைபெற்றது. ஆனால், சில காலத்திற்கு முன்னர் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல் ரசிகர்கள் தன்னை AK என்று அழைக்குமாறு கூறியிருந்தார்.
அதை ரசிகர்கள் நல்ல பிள்ளைகளாக கடைபிடித்து வந்த நேரத்தில், மீண்டும் கடவுளே அஜித்தே என்ற கோஷம் அதிமாகின. அதற்கு அஜித் அப்படி அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
முதன்முதலில் அஜித்திற்கு தல என்ற பெயர் வந்ததே தீனா படத்தில்தானாம். அந்த தீனா படத்தில் நடந்த ஒரு விஷயம் குறித்து வாலி பேசியதைப் பார்ப்போம்.
“பாடல் எழுத சொன்ன பத்து நாட்களில் முடித்துவிட்டேன். ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து பாடல் வரியை சொன்னேன். வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுர வரையில்ல’ என்று வரிகளை சொன்னேன். அவர் எதுவுமே கூறவில்லை. நானும் 2 நிமிடம் பொருத்து பார்த்தேன். அவர் எதுவும் கூறாமல், அமைதியாக உட்கார்ந்திருந்தார். உடனே நான் “இதற்குதான் புது இயக்குநர்களுக்கு வரிகள் எழுதுவதில்லை.
நல்லா இருக்குன்னா நல்லா இருக்குன்னு சொல்லு. நல்லா இல்லனா வேற எழுதி தரப் போறேன். இது என்ன பைபிளா? வரிகளை மாற்றவே கூடாதுன்னு சொல்றதுக்கு.
இப்படி செத்தவங்க கையில் வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்க” என்று கேட்டேன். அப்போது என்னை வியந்து பார்த்தப்படி முருகதாஸ் சொன்னார். படம் முழுவதும் அஜித்குமார் கையில் ஒரு வத்திக்குச்சி வைத்து வாயில் குத்தி கொண்டே வருவார். அது எப்படி உங்களுக்கு தெரிந்தது’ என வியப்புடன் கேட்டார். நான் எதோ எதர்ச்சியாக எழுதினேன். அது இப்படி பொருத்தமாக அமைந்துவிட்டது.” என்று வாலி பேசினார்.