Mustafa Mustafa
Mustafa Mustafa

விமர்சனம்: முஸ்தபா முஸ்தபா - விழிப்புணர்வு ஓகே... ஆனா சிரிப்பு தான் வரலைப்பா!

இந்த வாரம் வெளியாகி உள்ள 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
Published on
ரேட்டிங்(2.5 / 5)

சதீஸ், கருணாகரன், புகழ், சுரேஷ் நடித்துள்ள முஸ்தபா முஸ்தபா படத்தை பிரவீன் சரவணன் இயக்கி உள்ளார். சதீஷ் மிகவும் போராடி ஒரு பெண்ணை காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

திருமணதிதிற்கு முதல் நாள் காலை சதீஷ் போனுக்கு சதீஷ் ஒரு பெண்ணுடன் ரொமான்ஸ் செய்வது போல் ஒரு வீடியோ வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடையும் சதீஷ் இந்த வீடியோவை அனுப்பியது யார் என தனது நண்பர் சுரேஷுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல், ஹேக்கராக இருக்கும் தனது பழைய நண்பர் கருணாகாரனின் உதவி கேட்கிறார் சதீஷ். கருணா உதவி செய்கிறார். அந்த வீடியோவை யார் அனுப்பியது என்று சொல்கிறது முஸ்தபா முஸ்தபா.

சதீஷ், கருணா இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆனவர்கள். இருவரும் ஆரம்ப காலங்களில் சேர்ந்து நடித்து சில படங்களில் சிரிக்க வைத்துள்ளார்கள். இதே போல் இருவரும் இந்த படத்தில் நமக்கு சிரிப்பை வர வைப்பார்கள் என்று பார்த்தால், குறைந்த பட்சம் கிச்சு கிச்சு கூட வர வைக்க வில்லை.

இருவரின் நடிப்பும் நகைச்சுவைக்கும் பல கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. நான் இருக்கும் படத்தில் கண்டிப்பாக நகைச்சுவை இருக்காது என்பதை போல் நடிக்கும் யோகிபாபு வரிசையில் இப்போது சதீஷ் மற்றும் கருணாவும் சேர்ந்து விட்டார்கள். வீடியோவை அனுப்பியது யார் என்ற பரபரப்பை படம் தருவதற்கு பதிலாக வீடியோவை யார் அனுப்புனா என்ன? சீக்கிரம் படத்தை முடிங்க என்றும் சொல்லும் அளவில் கதை நகர்கிறது.

போதாகுறைக்கு புகழ் தனது மேனரிசங்களாலும், குரலாலும் நடிப்பதற்கு பதிலாக பயமுறுத்தி இருக்கிறார். (புகழ் சார் உங்களுக்கு டிவியில் கிடைத்த புகழ் சினிமாவில் கிடைக்க கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணுங்க)

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ACCUSED - சைக்கலாஜிக்கல் டிராமா!
Mustafa Mustafa

படத்தில் பாசிட்டிவான ஒரே விஷயம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களில் உண்மை உள்ளதா என்று கேள்வி எழுப்பியது மட்டுமே. ஜேம்ஸ் ரூபர்ட் பின்னணி இசை சுமாராக உள்ளது.

படத்தில் இப்படி குறைகள் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பவர்கள் ஒரு முறை பார்த்தால் சற்று விழிப்புணர்வு கிடைக்கலாம்.

மொத்தத்தில் முஸ்தபா முஸ்தபா - கொஞ்சம் பெட்டரா பண்ணி இருந்திருக்கலாமேப்பா..!

logo
Kalki Online
kalkionline.com