ஒருமுறை கவுண்டமனி தனது மனைவி குறித்து பயில்வானிடம் பேசியதாக பயில்வான் கூறியிருக்கிறார். அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்ப்போம்.
கவுண்டமணி செந்தில் காம்போ ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தது. குணச்சித்திர நடிகராக, காமெடியனாக கலக்கியவர் கவுண்டமணி. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர், தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மீண்டும் இவர் காமெடியனாக களமிறங்குவதும் கஷ்டம்தான்.
ஏனெனில், வடிவேலுக்கு முன்பே மிகவும் புகழ்பெற்றவர் கவுண்டமணி. இப்போது வடிவேலுக்கே அவ்வளவாக படங்கள் இல்லை. மாமன்னன் படத்தை அடுத்துதான் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதுவும் தந்தை போன்ற கதாபாத்திரங்களில்தான் அவருக்கு செட்டாகிறது.
அதேபோல், பயில்வான் ரங்கநாதன் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும், சில சமயங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
அந்தவகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டு பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணியை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது உள்ளூரில் சினிமா ஷூட்டிங் நடைபெற்றால், நடிகை நடிகர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு வருவார்கள். அதேபோல்தான் அந்தப் படத்தில் பயில்வான் உட்பட அனைவரும் வீட்டிலேயே சாப்பிட்டு வந்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், கவுண்டமணி மட்டும் ஷூட்டிங் ஸ்பாட் வந்து கடையில் வாங்கி வந்து சாப்பிட்டு வந்தாராம். இதை பல நாட்களாக கவனித்து வந்த பயில்வான், ஒருமுறை அவரிடமே கேட்டிருக்கிறார். அதற்கு கவுண்டமணி, “என் மனைவிக்கு சமைக்கத் தெரியாதுடா, கேவலமா இருக்கும், அதை போய் சாப்புட சொல்றியே” என்று திட்டினாராம். அப்போதுதான் இந்த உண்மை பயில்வானுக்கு தெரிய வந்ததாம்.
பயில்வான், கவுண்டமணி இருவரும் இணைந்து ஆவாரம் பூ, ஊர் மரியாதை, தர்மதுரை, ஜெய்ஹிந்த், எல்லாமே என் ராசாதான், ஆசை, ஜமீன் கோட்டை ஆகிய படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.