ஜெயம் ரவி தனது பெயரை இனி ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் என்றும், இப்படி அழையுங்கள் என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சினிமா தொகுப்பாளர் மோகனின் இரண்டாவது மகன் ஜெயம் ரவி. ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா துறையில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. ஹீரோவாக நடித்த முதல் படமே (ஜெயம்) இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு படமாக இருந்து வருகிறது. இந்த படத்தின்மூலம்தான் அவருக்கு ஜெயம் ரவி என்ற பெயரும் வந்தது.
அதன்பின்னர் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்து பிரபலமானார். இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. தற்போது இவரது நடிப்பில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் லைனப்பில் உள்ளன.
இதற்கிடையே ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்திக்கும் தனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இருவருக்கும் இடையே காரசாரமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமூக வலைதளங்களில் பலர் ஜெயம் ரவிக்கு ஆதரவாக குரல்கள் எழுப்பினர்.
இப்படி தொடர்ந்து பல இன்னல்களில் சிக்கிக்கொண்ட இவர், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் சற்று தெளிவாக இருக்கிறார் என்றே கூற வேண்டும். ஏனெனில், சமீபக்காலமாக ப்ரோமோஷனில் பேசும்போது அவர் மோடிவேஷனாகவும் பாஸிட்டிவாகவும் பேசுகிறார். அதேபோல் போதை காலம் திரும்புதடி என்ற அவரது பாடலுக்கு நிகழ்ச்சியிலேயே ஆடியது வைப் மெட்டிரியலாக மாறியது.
சமீபத்தில் இயக்குநராக மாறவுள்ளார் என்றும் செய்திகள் கசிந்தன. ஆகையால், பல மாற்றங்கள் ஜெயம் ரவியிடம் காண முடிகிறது.
இப்படியான நிலையில், இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.
ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இவரின் இந்த பாஸிட்டிவான மாற்றங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.