இயக்குநர் அட்லீ தனது அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிதான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்தான முழு செய்திகளைப் பார்ப்போம்.
இயக்குநர் அட்லீ சங்கரின் துணை இயக்குநராகப் பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெரிய பெரிய நடிகை நடிகர்களை வைத்து எடுத்தார். இரண்டாவது படமே விஜய் வைத்து தெறி படம் இயக்கினார். இதுவும் பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ந்து விஜய் வைத்து மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார்.
இதனையடுத்து ஜவான் படத்தில் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்து பாலிவுட்டில் களமிறங்கினார். இதனால், வட இந்தியா செல்வந்தர்களுக்கே நெருக்கமானவர் ஆனார்.
இவரின் தெறி படம் தற்போது பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை அட்லீதான் தயாரித்திருக்கிறார். இதற்கு முன்னர் இரண்டு தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ஒரு மாஸ் ஹீரோவை வைத்து தயாரிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
பேபி ஜான் படம் கிறிஸ்ட்மஸ் பண்டிகைக்கு ரிலீஸாகவுள்ளது. இதனால், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. இந்த ப்ரோமோஷனில்தான் அட்லீ இதுகுறித்து பேசியிருக்கிறார். “என்னுடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கான வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது.
விரைவில் படம் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குவார்.” என்றார்.
இருவரின் கூட்டணியில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மிகப்பெரிய அளவு ஹிட்டானது. இப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.