இளையராஜாவுக்கு பின் நான் வணங்கும் ஒரே நபர்.! – 'டோரதி' வெற்றி விழாவில் உணர்ச்சி பெருக்கில் மிஷ்கின்!

'டோராதி' திரைப்பட வெற்றி விழாவில் எமோஷனலான மிஷ்கின்; சினிமா வட்டாரத்தில் நெகிழ்ச்சி!
Mysskin speech
Mysskin speech
Updated on: 

எந்த மேடையில் பேசினாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பேசுபவர் மிஷ்கின் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக பேசி விடுவார். இதனால் இவர் மீடியாக்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவருடைய வெளிப்படையான பேச்சு நண்பர்களை விட சில எதிரிகளையும் இவருக்கு சம்பாதித்து தந்திருக்கிறது.

நேற்று நடந்த ஒரு திரைப்பட விழாவில் மிஷ்கின் செய்த ஒரு விஷயம் தற்போது சினிமா உலகத்திலும் மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்ன என்பதை இங்கே காண்போம்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷி காந்த் சனந்த் நடித்துள்ள டோர தி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இந்த திரைப்படம் கலந்து பட்ட விமர்சனத்தை பெற்று வருகிறது. திருநங்கைகளின் பற்றி சொல்லப்பட்டுள்ள இந்த படம் பரவலான வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் லிங்குசாமி,வசந்தபாலன், சசி, மிஸ்கின் உட்பட பல இயக்குனர்கள் கலந்து கொண்டு இத்திரைப்படம் வெற்றி பெற்றதற்காக வாழ்த்தினார்கள்.

இதில் மிஸ்கின் வழக்கம் போலவே எமோஷனாக பேச ஆரம்பித்தார்”.தமிழ் சினிமாவில் வந்த தலைசிறந்த படங்கள் என்று நான் இரண்டு படங்களை நினைத்திருந்தேன். இப்போது அதெல்லாம் பின்னால் சென்று விட்டது.இப்பொழுது சிறந்த படம் என்றால் அது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோராதி படம் தான்.

கார்த்திக் சுப்புராஜின் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்று விருப்பமாக உள்ளது. நான் காலை தொட்டு வணங்கியது ஒரே ஒருத்தர் தான்.அவர் இசைஞானி இளையராஜா.நான் வணங்க வேண்டும் என்று விருப்பப்படுவது தற்சமயம் கார்த்திக் சுப்புராஜின் கால்களில்.நான் நந்தலாலா படத்தின் சூட்டிங் சமயத்தில் ஒரு பிரச்சனை வந்தது அந்தப் பிரச்சனையை ஒரு பெண் சமாளித்தார். அவரை பலர் பெண் என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு திருநங்கை. தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

திருநங்கைகள் என்பவர்களுக்கு நாங்கள் நாம் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்கிறோம்.நாம் அவர்களுக்கு வாழ்வு தருகிறோம் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.இந்த கண்ணோட்டமே தவறு. இயற்கையே ஆண் பெண் திருநங்கை என்று மூன்று பாலினங்களை உருவாக்கியுள்ளது.நான் தான் இதை புரிந்து கொள்ளவில்லை.ஆதாம், ஏவாள் பிறந்த போதே திருநங்கை இனமும் வந்துவிட்டது. திருநங்கையை பற்றி இவ்வளவு ஆழமாக அவர்களுக்கும் ஒரு காதல் உணர்வு இருக்கிறது என்று சொன்ன திரைப்படம் எதுவும் இல்லை. தற்போது கார்த்திக் சுப்புராஜ் அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டார் ரிஷி மற்றும் சனந்த் இருவரும் என் தம்பிகள்.சனந்த் அப்படியே ஒரு திருநங்கையை உள்வாங்கி நடித்துள்ளார்.

டோரதி
டோரதி

தம்பிகள் இருவரும் இனிமேல் தான் சினிமா துறையில் மிகவும் கவனமாக உங்கள் பாதையை எடுத்து வைக்க வேண்டும் "என்று பேசிக் கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் "உங்களுக்கு நான் ஏதாவது தர வேண்டும் ஏதாவது பரிசை அளிக்க வேண்டும் என் கையில் எதுவுமே இல்லையே "என்று சுற்றி முற்றி பார்த்தவர் திடீரென்று கீழே இறங்கி கையில் உள்ள மோதிரத்தை ரிஷி மட்டும் சனந்த் கையில் கொடுத்துவிட்டார்.

"இதுதான் என்னால் முடிந்தது" என்றார் எப்போதுமே ஒரு விஷயம் மிஷ்கினுக்கு பிடித்து விட்டால் அதை தலையில் வைத்து கொண்டாடுவார் மோதிரத்தையோ அல்லது வேறு எந்த பரிசையும் மிஷ்கின் தந்ததில்லை. ஆனால் இது முதல் முறை அந்த அளவிற்கு மிஷினுக்கு இப் படம் பிடித்து விட்டது.

இது திருநங்கைகள் பற்றி பேசும் படம் என்பதால் இருபதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இதில் பேசிய சுபா என்ற திருநங்கை" இதற்கு முன்பு காஞ்சனா, பாம்பே போன்ற படங்களில் திருநங்கைகளை பெருமைப்படுத்தி காட்சிகள் வந்துள்ளன.ஆனால் திருநங்கைகளுக்கும் ஒரு நட்பு,காதல் போன்ற உணர்வுகள் இருக்கிறது என்று ஆழமாக சொன்ன படம் டோரதி திரைப்படம் தான். 1980ல் டி ராஜேந்தர் எழுதிய 'கொக்கரக்கோ கூவுற சேவல்' என்ற பாடல் திருநங்கைகளை கிண்டல் செய்து பாடும் பாடலாக இருந்தது. அதன் பிறகு தான் திருநங்கைகளை பொது இடங்களில் அதிகமாக கிண்டல் செய்தார்கள். யு வன் கூட திருநங்கைகளை கிண்டல் செய்து பாடல்கள் இயற்றியுள்ளார். ஆனால் அவரது அப்பா இளையராஜா அதை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த டோரதி படத்தில் திருநங்கைகளை மீனாட்சி, தாரங்கி என்று கடவுளுக்கு இணையாக இசை அமைத்து தன் குரலிலேயே பாடியுள்ளார்.இது நம்மைப் போன்ற திருநங்கைகளுக்கு கிடைத்த பெருமை ஆகும்.பாலச்சந்தர் ரஜினி,கமலை தந்தது போல கார்த்திக் சுப்புராஜ் ரிஷிகாந்த், சனத்தை தந்துள்ளார்.இவர்கள் இருவரும் பெரிய அளவில் சிறந்து விளங்குவார்கள்" என்று எமோஷனலாக பேசினார்.

Dorothy Audio launch
Dorothy Audio launch

டைரக்டர் வசந்தபாலன் பேசும்போது "மாஸ் என்ற பெயரில் அதிகமாக வன்முறை ஆபாசங்கள் சினிமாவில் வருகிறது இதிலிருந்து என் குழந்தைகளை எப்படி காப்பது என்றதே பயமாக உள்ளது இந்த சூழ்நிலையில் மிகவும் அழகிய அழகாக எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி பூ போல சினிமாவில் வந்துள்ளது டோரதி.

இதை பலர் பல விதங்களில் விமர்சிக்கிறார்கள்.நான் உண்மையாக சொல்கிறேன் இந்த படத்தை நாம் அனைவருமே குடும்பத்துடன் பார்க்க வேண்டும்" என்றார் இறுதியாக கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது "இந்த படத்தை பற்றி பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள் நான் பார்த்த உணர்ந்த என்னை எனக்கு வழித்த ஒரு விஷயத்தை பதிவு செய்ய நினைத்தேன் அதுதான் இந்த பதிவு" என்றார்.

படம் வெற்றி பெற்ற பின் பல இயக்குனர்கள் தாங்களே வந்து ஒரு படத்தின் வெற்றி விழாவில் மனதார வாழ்த்தியது தமிழ் சினிமாவில் மிக அபூர்வமாக நடத்தும் நிகழ்வு பாரதி படத்திற்கு இது நடந்துள்ளது படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் திருநங்கைகளின் உணர்வுகளை இதுவரை தமிழ் சினிமா இந்த அளவிற்கு நேர்த்தியாக பதிவு செய்ததில்லை என்கிறார்கள் விமர்சகர்கள்.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களுக்கு வடபழனியில் பிரம்மாண்டம்: 50 ஆண்டு ஏக்கத்திற்கு தீர்வு!
Mysskin speech
இதையும் படியுங்கள்:
கார்த்திக் சுப்புராஜ் - ரிஷிகாந்த் இணைந்த 'டோரதி' திரை விமர்சனம்: அந்த க்ளைமாக்ஸ் ஒர்க்அவுட் ஆனதா?
Mysskin speech
logo
Kalki Online
kalkionline.com