'நான் கடவுள் இல்லை' உணர்ச்சிகள் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படம் !

'நான் கடவுள் இல்லை' உணர்ச்சிகள் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படம் !
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'கேப்மாரி' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் கடவுள் இல்லை’.இந்த படத்தில் பருத்திவீரன் சரவணன், நடிகை இனியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகினி, இமான் அண்ணாச்சி மற்றும் மதுரை மாயக்கா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

'நான் கடவுள் இல்லை' ஒரு க்ரைம் த்ரில்லர், குடும்ப கதை மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. சமுத்திரக்கனி போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக பருத்திவீரன் சரவணன் நடித்திருக்கிறார். மகளை சரவணன் கடத்திச் செல்லும் போது சமுத்திரக்கனி எப்படி பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

'கேப்மாரி' படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவு செய்ய பிரபாகர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் ‘நான் கடவுள் இல்லை’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com