ஒரு மனிதனுக்கு தன் வாழ்வில் பல ஆசைகள் தோன்றும் மறையும். அந்தவகையில் நடிகர் நம்பியாருக்கு தோன்றிய விசித்திரமான ஆசைகள் குறித்துப் பார்ப்போம்.
ஒருகாலத்தில் எம்.ஜி.ஆருக்கு இணையாக பேசப்பட்ட ஒரு நடிகர் நம்பியார். திரையில் தோன்றுவதையே நிஜம் என்று நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு நிஜ வில்லனாகவே தெரிந்தவர்தான் இவர். கையை கசக்கி ஒருவிதமாக பேசும் ஸ்டைலையே தனது வில்லத்தனத்திற்கு அதிகம் பயன்படுத்தி சிறந்த வில்லனாக வலம் வந்தார்.
அந்த காலத்தில் நம்பியாரை திட்டித் தீற்காதவர்களே இல்லை. அது நிஜமல்ல, அது ஒரு படம்தான் என்று புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மக்கள் இல்லை என்றாலும், தான் நிஜ வாழ்க்கையில் ஒரு நல்லவன் என்பதைப் புரிய வைக்க எந்த அவசியமும் இல்லை என்று நினைத்து வில்லனாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் நம்பியார்.
சில காலக்கட்டத்திற்கு பிறகு, கோலிவுட் அடுத்த கட்டத்திற்கு சென்ற பிறகு, குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார் நம்பியார். விஜய்க்கு தாத்தாவாக நடித்து அசத்தியவர்.
நிஜ வாழ்க்கையில் தீவிர ஐயப்ப பக்தனாக இருந்த இவருக்கு இருந்த ஆசைகள் ஏராளம். அந்த ஆசைகளை கேட்டால், இந்த மனுஷன் வாழ்க்கைய எவ்வளவு ரசித்து வாழ்ந்திருக்கிறார் என்று தோன்றும்.
நம்பியாருக்கு உலகத்தைச் சுற்றி வர மிகவும் ஆசை. பிலிப்பைன்ஸ் அருகில் இருக்கும் பசிபிக் பெருங்கடல் சுமார் 40,000 அடி ஆழம் இருக்கும். அந்த ஆழத்தை பார்க்கவேண்டும் என்பதுதான் நம்பியாரின் முதல் ஆசை.
அலஸ்காவும் சைபீரியாவும் ஒன்றாக சேரும் இடமான பேரீங் ஸ்ட்ரீட் வழியாக தண்ணீருக்குள் நீந்தி ஆர்டிக் பெருங்கடலும் சென்றடைய வேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்ததாம்.
தென் துருவத்தில் நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அமெரிக்காவில் உள்ள ஆண்டஸ் மலைக்கு செல்ல வேண்டும், டோக்கியோவில் இருந்து கோபன்ஹேகனுக்கு செல்ல வேண்டும் போன்ற நிறைய ஆசைகள் அவருக்கு இருந்தனவாம்.
இப்படி இத்தனை ஆசைகள் இருந்தாலும், தனது வாழ்க்கை முழுவதையும் அந்த ஒரு ஆசைக்காகவே அற்பணித்துக்கொண்டார். ஆம்! நடிப்புதான். இந்த ஆசையால், மற்ற ஆசைகளை நிறைவேற்றாதது பெரிய விஷயமாக அவருக்குத் தோன்றவில்லை.
எது எப்படியோ? அடுத்த பிறவியிலாவது இந்த அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்வார் என்று நம்புவோம்.