இரும்புச் சத்து உடலுக்குத் தேவையான மிக முக்கியமான சத்தாக உள்ளது. இது ஆக்சிஜனை கடத்தி, ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும், ஒட்டுமொத்த செல்களின் இயக்கத்திற்கு இது உதவுவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அந்த வகையில் ஹீமோகுளோபின் அதிகமுள்ள 10 பழங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தர்பூசணி: 100 கிராம் தர்பூசணியில் 0.4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது அதிக அளவு இல்லையென்றாலும், அனைவரும் விரும்பும் சுவையோடு உடலுக்கு புத்துணர்வைக் கொடுத்து அன்றாட இரும்பு சத்துத் தேவையை பூர்த்தி செய்வதில் தர்பூசணி முக்கியப் பங்காற்றுகிறது.
2. மாதுளை: மாதுளையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளதால் இது உடல், இரும்புச் சத்தை உறிஞ்ச உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
3. மல்பெரிகள்: மல்பெரியில் வைட்டமின் சி சத்தும் இரும்பு சத்தும் அதிக அளவில் உள்ளன. இது இரும்புச் சத்தினை உறிஞ்சும் திறனை அதிகரித்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 100 கிராம் மல்பெரிகளில் 2.6 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
4. பேரிட்சை பழம்: பேரிட்சை பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் இருப்பதால் இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதோடு, இதில் இருக்கும் இரும்புச் சத்து உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. 100 கிராம் பேரிட்சை பழத்தில் 0.9 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
5. உலர் திராட்சை: உலர் திராட்சையில் இருக்கும் இரும்பு சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கக்கூடிய எளிய ஸ்நாக்ஸாகவே இருக்கிறது. 100 கிராம் உலர்ந்த திராட்சையில் 1.9 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
6. அத்திப்பழம்: அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, மேலும் இரும்பு சத்து உட்கொள்ளும் அளவையும் அதிகரிக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் 0.2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
7. ஆப்ரிகாட்: 100 கிராம் உலர்ந்த ஆப்ரிகாட்களில் 2.7 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்அதிகம் உள்ளதால் இது உடல் இரும்புச் சத்தைப் பெறவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
8. கிவி: கிவியில் அதிக அளவு இரும்புச் சத்து இல்லை என்றாலும் இதில் அதிகளவில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்கள் உடல் இரும்பு சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்க உதவுகிறது. 100 கிராம் கிவியில் 0.3 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
9. ஆப்பிள்: 100 கிராம் ஆப்பிளில் 0.5 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆப்பிளில் அதிக அளவு இரும்பு சத்து இல்லையென்றாலும், இது ஒட்டுமொத்த இரும்புச் சத்தை உட்கொள்ளும் அளவை அதிகரித்து, முழு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
10. ப்ரூன்: 100 கிராம் ப்ரூன்களில் 0.93 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளதால், உடலின் ஆற்றலை அதிகரிக்க இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும். இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது.
மேற்கூறிய பத்து பழங்களிலும் இரும்புச் சத்து பெருமளவில் இருப்பதால் இதனை அன்றாட வாழ்வில் சாப்பிட்டு அனீமியாவை அப்புறப்படுத்துவோம்.