டீப் ஃபேக்கில் சிக்கிய லேடி சூப்பர் ஸ்டார்... ரசிகர்கள் ஷாக்!

Keerthy suresh and Nayanthra
Keerthy suresh and Nayanthra
Published on

பிரபல தமிழ் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாடு டிஜிட்டல் மையமாக மாற மாற குற்றங்களும் பெருகி கொண்டே தான் போகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. இதனை எவ்வாறு தடுப்பது என தெரியாமல் சைபர் க்ரைம் போலீசாரும் திணறி வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தி அண்மையில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக உடையணிந்தது போல சித்தரிக்கப்பட்டது. வெளிநாட்டு வாழ் இந்திய பிரபலத்தின் இன்ஸ்டாகிராம் வீடியோவை deep fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ராஷ்மிகா கவர்ச்சியாக உடையணிந்ததாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பிகாரைச் சேர்ந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கத்ரீனா கைஃப்-இன் வீடியோவும் சித்தரிக்கப்பட்டு சர்ச்சையானது. அதன் தொடர்ச்சியாக, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது.

ஆனாலுன் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் வருகிறது. ராஷ்மிகாவை தொடர்ந்து பல பாலிவுட் திரையுலக கதாநாயகிகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியானது. தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டாரும், கீர்த்தி சுரேஷும் இந்த டீப் ஃபேக்கில் சிக்கியுள்ளனர்.

Keerthy suresh and Nayanthra
Keerthy suresh and Nayanthra

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் டீப் ஃபேக் ஆபாச வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் ஸ்டோரியில் கீர்த்தி சுரேஷ் டீப் ஃபேக் போலி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் திரையுலகத்தினர் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com