கவர்ச்சியா? நடிப்பா? அழகு சிலை நிதிஅகர்வால்

சினி செய்தி
கவர்ச்சியா? நடிப்பா? அழகு சிலை நிதிஅகர்வால்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-ராகவ் குமார்

கவர்ச்சியா?நடிப்பா? நிதி அகர்வாலை உங்களுக்கு நினைவு இருக்கிறதா? ஈஸ்வரன் படத்தின் வெளியிட்டு விழாவில் சிம்புவை மேடையில் மாமா, மாமா என்று அழைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

 தமிழில் பெரிய ஓப்பனிங் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டை பிடித்து தெலுங்கு பக்கம் சென்று அங்கே பலரை தூங்க விடாமல் செய்து கொண்டு இருக்கிறார்.

மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.இம்முறை மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கழகத்தலைவன் படத்தில் நடிக்கிறார்.மகிழ் திருமேனி நடிப்பிற்கும், கதைக்கும் முக்கியத்துவம் தந்து படம் எடுப்பவர்.நிதி கழகத்தலைவனில் என்ன ரோல் செய்ய போகிறார்.

இந்த படம் நிதியின் நடிப்பு திறமையை வெளிகொணரும் படமாக இருக்குமா? நிதி கிளாமர் பாதையில் இருந்து நடிப்பு பாதைக்கு மாறபோகிறாரா? இப்படி பல கேள்விகளுக்கு கழகத்தலைவன் படம் பதில் சொல்லலாம்.சிம்புவை மாமான்னு கூப்பிட்ட வெள்ளந்தியான பொண்ணு நிதிக்கு நல்லது நடக்கும்னு வாழ்த்துவோம். 

logo
Kalki Online
kalkionline.com