ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இடம்பெற்ற அனுஜா படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
திரையுலகில் மிகப்பெரிய விருது என்றால், அது ஆஸ்கார் விருதுதான். உலக படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், படம், நடிகை, துணை நடிகர் நடிகை, இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வரும் மார்ச் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதிலிருந்து சில படங்கள் நாமினேட் ஆகின.
இதில், 2025ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த அனுஜா இடம்பிடித்திருக்கிறது.
இப்படத்தை ஆடம் ஜே.கிரேவ்ஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், “இது ஒரு அழகான படம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் ஒரு விஷயம். அனுஜா ஒரு அழுத்தமான, சிந்தனையைத் தூண்டும் ஒரு அற்புதமான பதிவு. பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை ஆழமாக பிரதிபலிக்கிறது. இது போன்ற ஒரு அற்புதமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படத்துக்கு ஆதரவு கொடுப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று பேசினார்.
மேலும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மோங்கா ஏற்கனவே , தயாரித்த 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் 'பீரியட்: என்ட் ஆஃப் சென்டென்ஸ்' ஆகிய இரண்டும் படைப்புகளுக்கு அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.
அந்தவகையில் இந்த அனுஜா படத்தின் ஓடிடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படம், வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்க்கத்தான் ஆவலோடு இருக்கின்றனர்.