
புஷ்பா 2 இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 16-வது நாளில் ரூ 13.75 கோடியை வசூலித்ததுள்ளது. படத்தின் மொத்த வசூல் தற்போது ரூ.1004.35 கோடியாக உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் புஷ்பா. புஷ்பா திரைப்படம் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு கொண்டு வந்தனர்.
அல்லு அர்ஜுனின் அட்டகாசமான நடிப்பு, ராஷ்மிகாவின் ஆளை மயக்கும் கவர்ச்சியோடு, அல்லு அர்ஜுன் சண்டை காட்சிகள் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதுடைய மக்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாகியிருந்தது. இவர்களுடன் வில்லனாக பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மக்களிடையே புஷ்பா பட வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் இப்படத்திற்கு மிக பிரம்மாண்டமாக பிரமோஷம் செய்யப்பட்டு உலகளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
புஷ்பா 2 ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகளவில் ரூ.294 கோடியும், ஐந்தாவது நாளில் ரூ.880 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. புஷ்பா 2 அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடித்து நொறுக்கி வருகிறது.
இப்படம் வடஅமெரிக்கா, யுகே போன்ற வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வசூலை வாரி வருவது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 வெளியாகி16-வது நாளில் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சக்கை போடு போட்டு வருகிறது. அதன் மூன்றாவது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20), திரைப்படம் இறுதியாக ரூ.1000 கோடி கிளப்பில் நுழைந்தது. புஷ்பா 2 இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 16-ம் நாளில் ரூ.13.75 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் தற்போது ரூ.1004.35 கோடியாக உயர்ந்துள்ளது. இது இன்னும் உயர்ந்து அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 ஏற்கனவே ஸ்ட்ரீ 2, பாகுபலி 2 (ஹிந்தி), Gadar 2, அனிமல் மற்றும் ஜவான் ஆகிய படங்களின் 2 வார வசூலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புஷ்பா 2 மீது அன்பைப் பொழிந்த ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "ஒரு சாதனையை முறியடிக்கும் வெற்றியின் மேல் அமர்ந்திருப்பது நம்பமுடியாததாக உணர்கிறேன். மேலும் அந்த எண்ணிக்கை எனக்கு முக்கியம் என்பதை நான் மறுக்க மாட்டேன். நான் இரண்டு மாதங்கள் இந்த மயக்கத்திலேயே இருப்பேன். ஏனென்றால் ₹1000 கோடி படத்தின் நான் ஒரு பகுதியாக இருப்பது நகைச்சுவையல்ல." என்று கூறினார்.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜுனை பார்க்க வந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு 1 நாள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நடந்தும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் வெறித்தனமாக ஆதரவு அளித்து புஷ்பா 2 படத்தை வசூல் சாதனை படைக்க வைத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.