புஷ்பா 2 : ஒரு நாள் செலவு இத்தனை லட்சமா?

புஷ்பா 2 : ஒரு நாள் செலவு இத்தனை லட்சமா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருநதார்.

தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியாகி, இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

செம்மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கும் அல்லு அர்ஜூன் பின்னர், மிகப்பெரிய கடத்தல் தாதாவாக மாறும்படியாக இப்படம் உருவாகியிருந்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'புஷ்பா 2' படத்தின் ஒரு நாள் படப்பிடிப்புக்கான செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'புஷ்பா 2' படத்தின் சண்டைக்காட்சிக்கான ஒருநாள் படப்பிடிப்புக்கு சுமார் 80 லட்சம் வரை செலவு ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னணி இசை, அல்லு அர்ஜூன் அற்புத நடிப்பு, அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2ம் பாகத்தையும் எந்த குறையும் இல்லாமல் ரசிகர்களிடத்தில் கொண்டு செல்ல படக்குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.