Pushpa 2: நாளை வெளியாகும் Second Single வீடியோ!

Allu arjun as Pushpa
Allu arjun as Pushpa
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

புஷ்பா 2 படத்தின் முதல் சிங்கிளின் வைபே இன்னும் ரசிகர்களை விட்டு நீங்காத நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் நாளை வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம், புஷ்பா தி ரூல் பாகம் 1. இப்படம் 170 முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 360 முதல் 373 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலின் அல்லு அர்ஜூன் நடனம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதேபோல் சமந்தா ஆடிய படத்தின் தொடக்கப்பாடலும் பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. புஷ்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்த பாகத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம்செட்டி மீடியா தயாரித்துள்ள, 'புஷ்பா 2: தி ரூல்' ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சந்தன கடத்தல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இந்தப் படத்தின் முதல் பாகம், ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளது. அதேபோல் அல்லு அர்ஜுனும் இப்படத்திற்காக விருதுகளை வாங்கினார். அந்தவகையில் தற்போது படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு இரண்டாவது சிங்கிள் பற்றிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது.

முன்னதாக புஷ்பா 2 படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ பாடல் ரசிகர்களுக்கு ஒரு தரமான வைப் பாடலாக அமைந்தது. இதனையடுத்து நாளை காலை 11.07 மணிக்குப் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. இப்பாடல் ஒரு மெலோடி பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. போஸ்டரில் ‘ஸ்ரீவள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
5 மொழிகளில் ரீமேக்காகும் 'பார்க்கிங்'... கடும் போட்டிக்கு பிறகு விற்பனை!
Allu arjun as Pushpa

ஆகையால், ராஷ்மிகாவின் பாடல் என்பதும் தெரியவருகிறது. புஷ்பா முதல் பாகத்தில் எப்படி ‘சாமி’ மற்றும் 'ஸ்ரீவள்ளி' பாடல் இருக்குமோ, அதே அளவிற்கு இந்தப் பாடலும் இருக்கும் என்று ரசிகர்களால் கணிக்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்பாடல் ஒரு காதல் பாடலாகும்.

படக்குழு இந்தப் போஸ்டரை வெளியிட்டது முதல், X தளத்தில் புஷ்பா 2 மற்றும் அல்லு அர்ஜூன் என இரண்டு ஹேஷ்டேகுகளுமே ட்ரெண்டிங்கில் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com