ராஜாமௌலி இயக்கத்தில் மகாபாரதம் உருவாகவுள்ளது என்ற செய்திகள் கசிந்துள்ளன. அதுவும் இந்தியாவின் பிரபல ஹீரோ ஹீரோயின்கள் வைத்து என்ற செய்தி ரசிகர்களை வாயடைக்க செய்திருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால், ரசிகர்கள் இது ஒரு ரூமராகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
டோலிவுட்டிலிருந்து இப்போதுதான் ஒரு தரமான படம் வெளியாகி, பல கோடி ரூபாயை அள்ளி வருகிறது. ஆம்! புஷ்பா 2 திரைப்படம் 2000 கோடியை நெருங்கிவிட்டது. Table Profit எல்லாம் சேர்த்து கூட்டி கழித்து பார்த்தால், நிச்சயம் 3000 கோடியை கூட தொட்டுவிடும்.
இப்போதே டோலிவுட் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது. அந்தவகையில் தற்போது ராஜமௌலியின் அடுத்த படம் டோலிவுட்டை இன்னும் பல படி மேலே கொண்டுப்போக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசுகின்றனர்.
ஏனெனில், ராஜமௌலியின் அடுத்த படம் மகாபாரதம். ராஜமௌலியின் வாழ்நாள் ஆசை என்றால், அது மகாபாரத கதையை இயக்குவதுதான் என்று பலமுறை கூறியிருக்கிறார். இப்போது ராஜமௌலியின் ஒரு படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஸன் நடைபெற்று வருகிறது. அது நிச்சயம் மகாபாரத கதையாக இருக்கும் என்றே ரசிகர்கள் கணிக்கின்றனர்.
இந்த படத்தில் இந்தியா முழுவதும் உள்ள டாப் ஸ்டார்களை நடிக்க ராஜமௌலி தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் பட்ஜெட் 1000 கோடியாம். ஆனால், இதில் நடிக்கவுள்ள நடிகர்களை பார்த்தால் நிஜமாகவே 1000 கோடிதானா அல்லது அதற்கு பல மடங்கு அதிகமாகவா என்ற சந்தேகம் எழுகிறது.
கர்ணனாக பிரபாஸ் நடிக்க வாய்ப்பு உள்ளதாம். கிருஷ்ணராக மகேஷ் பாபு, அர்ஜுனராக ராம் சரண், தர்மராக அஜய் தேவ்கன், பீமராக ஜூனியர் NTR, நகுலனாக ஷாஹித் கபூர், சகாதேவனாக நாணி, துரியோதனனாக ராணா டகுபதி, துச்சாதனனாக விஜய் சேதுபதி, திரௌபதியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் நடித்தால் மிகவும் பிரம்மாண்டமான படமாகதான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதற்கு ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது 1000 கோடிக்கும் மேல் எந்த தயாரிப்பாளர் கொடுப்பார்கள். இது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்று என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.