'ரஜினி 170' அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இவர்தான் டைரக்டர்! அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்! தெறிக்கவிடப்போகும் இயக்குநர்!

'ரஜினி 170' அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இவர்தான் டைரக்டர்! அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்! தெறிக்கவிடப்போகும் இயக்குநர்!

ரஜினியின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இப்படத்தை இயக்கப்போவது யார் என்பதையும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தலைவர் 170' படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற கேள்வி பல மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது 'தலைவர் 170' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்க இருப்பதாக, லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இப்படம் 2024ல் வெளியாகும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதைத் தொடர்ந்து, 'தலைவர் 170' படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com