தீபாவளியைக் கோலாகலமாக கொண்டாடிய ராமாயணம்: உலகளவில் ₹507 கோடியை குவித்து மெகா ஹிட்!

நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸை மிரளவிட்ட ராமாயணம் படத்தின் பம்பர் வசூல் விவரங்கள்.
Ramayana
Ramayana box office The week
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

இந்திய சினிமாவின் மிகப்பிரமாண்டமான திரைப்படமான ‘ராமாயணம் - திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. சாக்னிக் தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தத் திரைப்படம் இன்று வரையில் ₹507.20 கோடியை தாண்டியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் ₹500 கோடி பாக்ஸ் ஆபீஸ் பட்டியல் ராமாயணமும் இணைந்து விட்டது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வழக்கமாக பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் , பெரும்பாலும் குறைந்த வசூலையே பெரும் என்ற வழக்கமான விதியை ராமாயணம் தகர்த்துள்ளது. வெளியாகி நான்கு நாட்களே ஆன நிலையில் இந்த திரைப்படம் சர்வதேச அளவில் ₹507.20 வசூலை இதுவரை பெற்று சாதனை படைத்துள்ளது. இன்று ( திங்கட் கிழமை) மட்டுமே , ராமாயணத்தின் ஹிந்தி பதிப்பு 21,770 காட்சிகளின் மூலம் ₹56.15 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.

இப்படத்தின் ஒட்டுமொத்த இந்திய நிகர வசூல் ₹238.85 கோடியை தொட்டுள்ளது. மேலும் மொத்த உள்நாட்டு வசூல் ₹285.20 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள திரையரங்குகளில் ராமாயணம் திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பல இடங்களில் ஆன்லைனில் கூட முன்பதிவு செய்ய முடியாத அளவிற்கு இருக்கைகள் பதிவு செய்யப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் மட்டும் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 89.8% இருக்கைகள் நிரம்பி உள்ளன. பெங்களூருவில் திரையிடப்பட்ட 264 காட்சிகளில் 86.5% இருக்கைகள் நிரம்பியுள்ளன. இதன் கன்னட பதிப்பு 76.7% நிரம்பியுள்ள நிலையில் , தெலுங்கு பதிப்பில் சற்று இருக்கை பதிவுகளில் சதவீதம் 61.9 ஆக குறைந்துள்ளது.

இன்றைய நாளில் இதுவரை ஹிந்தி பதிப்பு மட்டும் ₹48.04 கோடியையும், தமிழ் - ₹2.08 கோடி , கன்னடா - ₹ 4.22 கோடி , தெலுங்கு - ₹2.63 கோடி வசூலை பெற்றுள்ளது

Ramayana movie 2026 ராமாயணா திரைப்படம்
Ramayana movie 2026 ராமாயணா திரைப்படம் AI Image

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வசூலிலும் ராமாயணம் குறிப்பிடத்தக்க வகையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தீபாவளியான நேற்று ஒரு நாள் மட்டும் மொத்த வெளிநாட்டு வசூல் ₹46 கோடி அளவிற்கு வசூலித்து சாதனை செய்துள்ளது. ராமாயணத்தின் வசூல் சராசரி பெரிய பட்ஜெட் திரைப்படத்தின் வசூலை போல இருந்து வருகிறது. ஆனால் , படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம் என்பதால், அது இன்னும் சற்று பெரிய வசூலை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ராமாயணம் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஆயினும் , இது முந்தைய ராமாயணம் திரைப்படத்தின் ஆதிபுருஷ்ஷை விட ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸ் மிகவும் குறைவு. ஆனாலும் , திரைப்படத்தின் காட்சிகள் , பிரம்மாண்டம் , படத்தின் இசை , நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை படத்திற்கு மேலும் விளம்பரத்தை தருகிறது.

இதுவரை இந்தியத் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியலில் , ரஜினியின் 'கூலி' திரைப்படத்திற்கு அடுத்த இடமான 33 இடத்தில் ராமாயணம் உள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் - 2 வசூலை (₹829 கோடி) விரைவில் நெருங்க உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் , அதற்கேற்ற வசூலும் பெறத் தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
தினமும் ஊறுகாய் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்து உங்களுக்குத் தெரியுமா?
Ramayana