Rashmika Mandanna
Rashmika Mandanna

ராகுல் ரவீந்திரன் இயக்கும் பாலிவுட் படத்தில் இணைந்த ராஷ்மிகா!

Published on

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ள ராஷ்மிகா மந்தனா.

இந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா மாறி இருக்கிறார். கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்று பல மொழி படங்களில் கால் பதித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாலிவுட்டில் தற்போது வெளிவந்துள்ள அனிமல் திரைப்படம் அதிக அளவிலான வசூலை ஈட்டி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார்.

The Girlfriend
The Girlfriend

இந்த புதிய படத்திற்கு 'தி கேர்ள் ஃப்ரண்ட்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை பாடகி சின்மயின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் ஹெசம் அப்துல் வகாப் படத்திற்கு இசையமைக்கிறார். கிருஷ்ண வசந்த் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இது இவரின் 23 வது படம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
ரஜினியா? கமலா? - மாணவர்கள் சொல்வது என்ன?
Rashmika Mandanna

மேலும் ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், இவர் முதன் முதலில் சுல்தான் படம் மூலமாக நாயகியாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதோடு இவர் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் புஸ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com