'கட்டா குஸ்தி'யை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது!

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி
விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'கட்டா குஸ்தி' திரைப்படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் “மாஸ் மகாராஜா” ரவி தேஜாவின் ஆர்டி டீம்வொர்க்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

வென்னிலா கபடி குழு, ஜீவா போன்ற படத்தில் நடித்த விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் 'பூங்குழலி' கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கருணாஸ் , முனீஷ்காந்த் , காளி வெங்கட், ஸ்.ர்.பாண்டியன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.கே பிரசன்னா எடிட்டராக பணியாற்றுகிறார்.

கட்டா குஸ்தி
கட்டா குஸ்தி

இந்­தப் படம் தமிழ், தெலுங்கு என இரு­மொ­ழி­களில் வெளி­யாக உள்­ளது. மல்யுத்தம் விளையாட்டை பின்னணியாக வைத்து எடுக்கும் படம் தான் 'கட்டா குஸ்தி'. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'கட்டா குஸ்தி' படத்தை டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com