இயக்குநர் சந்தீப் ரெட்டி, நடிகை சாய்பல்லவி இன்றும் மாறாமல் அப்படியே இருப்பது மிகவும் அருமை என்று பாராட்டியிருக்கிறார்.
நடிகை சாய்பல்லவி ப்ரேமம் படத்தின்மூலம் தென்னிந்திய ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன.
தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி ரசிகர்களின் அன்பை பெற்றார். மேலும் இன்றுவரை அதிகம் மேக்கப் போடாமலும், எந்த விழாக்களுக்கு சென்றாலும் புடவை அணிந்தும் தனது சிம்பிளிசிட்டியை வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தனித்துவமே அவரின் ரசிகர்கள் பட்டாளத்திற்கு காரணமாயிற்று. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கு பின்னால், இன்னும் பல படி முன்னேறி சென்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். ஒட்டுமொத்த இந்தியர்களின் அன்பைப் பெற்றுவிட்டார்.
இதற்கிடையே இவர் பான் இந்திய படமான ராமாயணம் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படித் தொடர்ந்து படங்களில் கம்மிட்டாகி பிஸியாக உள்ளார். கோலிவுட், பாலிவுட் என தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.
அதேபோல் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாக சைதன்யாவின் கெரியரில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகயுள்ளது.
இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றது. இதில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களின் இயக்குநர் சந்தீப் ரெட்டியும் கலந்துக்கொண்டார். அப்போது நடிகை சாய் பல்லவி குறித்து பேசுகையில், “வாய்ப்புகளுக்காக காலப்போக்கில் ஹீரோயின்கள் ஆடை அணியும் விதத்தை மாற்றுவார்கள். ஆனால் சாய் பல்லவி சற்றும் மாறாமல் இருப்பது அருமை. உண்மையில் இது மிகவும் அருமை.” என்று பேசினார்.
மேலும் முதலில் சாய் பல்லவியைதான் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் என்றும் பேசியிருக்கிறார்.