

நடிகை சாய் பல்லவி ஹிந்தி சேனல் ஒன்றில், தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்து பேசியது , தற்போது ஊடகங்களில் செய்தியாக மாறி உள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவியான சாய் பல்லவி, பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று தனது நடன திறமையின் மூலம் புகழ்பெற்றார். அதன் பின்னர் பல யுடியூப் சேனல்களில் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு 'பிரேமம் ' படத்தின் மூலம் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் திரைப்படத்திலேயே சாய் பல்லவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் , மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்து சாய் பல்லவி முன்னணி நடிகையாக மாறியிருந்தார். ஆயினும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்த போதிலும் அமரன் திரைப்படம் தான் அவருக்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது.
தெலுங்கிலும் சாய் பல்லவி நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற அவருக்கு பாலிவுட் கதவு திறந்தது. தற்போது சாய் பல்லவியின் காட்டில் அடைமழை பெய்ய தொடங்கி உள்ளது. ஹிந்தியில் ஏற்கனவே அவர் அறிமுகமாக இருந்தாலும் , தற்போது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமான இராமாயணத்தின் 2 பாகங்களிலும் அவர் நடித்து முடித்துள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சாய் பல்லவி நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தில் ட்ரைலர் வெளியானதில் அவரது தோற்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரம் மணிரத்தினம் இயக்கி வரும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.தொடர்ச்சியாக சாய் பல்லவி பெரிய திரைப்படங்களில் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது சாய்பல்லவி நடித்துள்ள 'இராமாயணா- 1' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் , அதற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் தொகுப்பாளராக இயங்கும் இந்தியாவில் பிரபலமான 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் சாய் பல்லவி , ரன்பீர் கபூருடன் கலந்து கொண்டார். இந்த எபிசோட் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் சாய் பல்லவியிடம் அவரது எதிர்கால கணவர் குறித்த எதிர்பார்ப்புகளை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்?
அதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, "எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் எனது தொழில் வாழ்க்கையை மதிக்கக்கூடிய நபராக அவர் இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் தற்சார்பு மிக்கதாகவும் நான் நிர்வாகிக்க , அவர் ஆதரவு அளிக்க வேண்டும். என்னுடைய விருப்பங்களை மதித்து என்னுடைய லட்சியங்களை அடைவதற்கு துணையாக இருப்பவரையே நான் வாழ்த்துத் துணையாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
ஒரு மதிப்புமிக்க உறவில் இருக்கும் இருவருக்கும் பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் மிகவும் அவசியம் . என் வருங்கால கணவர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவருக்கு நன்றாக சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.